Breaking

Monday

ஒலுவில் துறைமுக காணி இழப்புக்காக மக்கள் தற்போது கோரும் நட்டஈட்டை வழங்க முடியாது..!SNM.Suhail
ஒலுவில் துறை­முக நிர்­மா­ணத்­திற்­காக மக்­க­ளி­ட­மி­ருந்து சுவீ­க­ரிக்­கப்­பட்ட காணி­க­ளுக்கு முன்னர் பொருந்­திய தொகையை விட அதி­க­மான தொகை நட்­ட­ஈட்டை தற்­போது மக்கள் கோரு­கின்­றனர். அதனை எம்மால் வழங்க முடி­யாது.

படி வழங்­கு­வோ­மே­யானால் வேறு பிரச்­சி­னைகள் ஏற்­படும் என துறை­முகங்கள் மற்றும் கப்பல் சேவைகள் அமைச்சர் அர்­ஜுன ரண­துங்க தெரி­வித்தார். 

கடந்த வெள்­ளிக்­கி­ழமை துறை­மு­கங்கள் மற்றும் கப்பல் சேவைகள் அமைச்சில் அமைச்சர் அர­்ஜுன ரண­துங்க தமிழ் ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளு­ட­னான சந்­திப்­பொன்றை நடத்­தினார்.

இதன்­போது ஒலுவில் துறை­முக காணி அப­க­ரிப்பு மற்றும் ஒலுவில் பிரதேச கட­ல­ரிப்பு குறித்து அவர் விடி­வெள்­ளிக்கு பிர­த்தி­யே­க­மாக கருத்து தெரி­விக்­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். 
இது குறித்து அவர்  மேலும் கருத்து தெரி­விக்­கையில், 
துறை­முக அபி­வி­ருத்­திக்­காக சுவீ­க­ரிக்­கப்­பட்ட காணிக்­கான நட்­ட­ஈடு வழங்­கு­வது குறித்த பேச்­சு­வார்த்­தைகள் தொடர்ச்­சி­யாக மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றது. சில­ருக்கு நட்­ட­ஈடு வழங்­கப்­பட்­டுள்­ளது. சில­ருக்கு வழங்­க­வேண்­டி­யி­ருக்கி­றது. 

எனினும் நட்­ட­ஈடு வழங்கும் நட­வ­டிக்கை தொடர்ந்தும் தாம­த­மா­கி­வ­ரு­கின்­றது.

அதற்­கான காரணம், காணி சுவீ­க­ரிக்­கப்­ப­டும்­போது பொருந்­திக்­கொண்ட தொகையை விட துறை­முகம் நிர்­மா­ணிக்­கப்­பட்ட பின்னர் அதிக தொகை நட்­ட­ஈட்டை மக்கள் கோரு­கின்­றனர்.

இதனை எம்மால் வழங்க முடி­யாது வழங்­கினால் எமக்கு பிரச்­சினை ஏற்­படும்.

இத­னா­லேயே இச்­செ­யற்­பாடு கால­தா­ம­த­மா­கி­றது. நாம் வழங்கும் நட்­ட­ஈட்டுத் தொகையை அவர்கள் ஏற்­றுக்­கொள்­வார்­க­ளாயின் அதனை வழங்க நாம் தயா­ராக இருக்­கிறோம்.
கட­ல­ரிப்பு விவ­காரம்

கட­ல­ரிப்பை தடுப்­ப­தற்கு ஒலுவில் மற்றும் அத­னை­யண்­டிய பகுதி கரை­யோ­ரங்­களில் தற்­கா­லி­கமாக நாம் கற்­களை போடு­கிறோம். இங்கு பாரிய கட­ல­ரிப்பு ஏற்­ப­டு­வ­தனால் உண்­டாகும் பாதிப்­பு­களை தடுக்க இந்த தற்­கா­லிக திட்டம் போதாது.

ஏற்­க­னவே பொருத்­த­மில்­லாத தடுப்பு திட்­டங்­களே இங்கு அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­கி­றது.

எனவே நிரந்­தர தீர்­வாக பொருத்­த­மான புதிய திட்­ட­மொன்றை அறி­மு­கப்­ப­டுத்­த­வுள்ளோம். இதற்­கான கலந்­து­ரை­யா­டல்கள் தற்­போது இடம்­பெ­று­கின்­றன.

வெளிநாட்டு கடன்­களின் மூல­மாக இதனை மேற்கொள்ள நட­வ­டிக்­கை­களும் எடுக்­கப்­ப­டு­கின்­றது. 

கட­ல­ரிப்பால் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்­கான நட்­ட­ஈடு வழங்­கு­வது குறித்து பிர­தேச செய­லா­ள­ருடன் கதைத்­துள்ளோம். இவ்­வா­றான கட­ல­ரிப்­புகள் காலத்­துக்கு காலம் ஏற்­ப­டு­கின்­றது. பின்னர் நிலைமை சுமூ­க­மா­கி­றது என்றார். 

இதே­வளை, திரு­கோ­ண­மலை துறை­முக அபி­வி­ருத்­திக்கு உதவி வழங்­கு­வது குறித்து  இந்தியா எம்முடன்  பேசவில்லை. இருப்பினும் சிங்கப்பூர் நிறுவனம் ஒன்றின் பிரதிநிதிகள் திருகோணமலை துறைமுகத்திற்கு வருகை தந்துள்ளனர்.

அவர்கள் முன்வைக்கும் மதிப்பீட்டு அறிக்கையின் பிரகாரம் திருமலை துறைமுகத்தின் அபிவிருத்தி பணிகள் விரைந்து முன்னெடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.


 முக்கிய குறிப்பு
சம்மாந்துறைநியூஸ் இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள்,செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு சம்மாந்துறைநியூஸ் நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு சம்மாந்துறைநியூஸ் இணையத்தளத்துக்கு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். நிருவாகம்.
செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog