Breaking

Sunday

அமைச்சர் ரிஷாட் அம்பாறையில் ஆட்டமிழக்கின்றாரா? உதுமான்கண்டு நாபீர்


"அம்பாறை மாவட்டத்தில் அமைச்சர் காட்டிவரும் கரிசணை படிப்படியாக முன்னேறிவருவதாக அவர்கள் நம்பினாலும், யதார்த்தம் வேறுவிதமாக இருக்கின்றது. உண்மையில், ரிஷாட்டின் ஆட்டம் களத்திலிருந்து முற்றாக வெளியேறும் நகர்வுகள் உக்கிரமடைந்து

காணப்படுகின்றது." என நாபீர் பௌண்டேசனின் தலைவர் யூ,கே, நாபீர் ஊடகங்களுக்கு விடுத்திருக்கும் அறிக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவ்வறிக்கையில் மேலும்

தெரிவிக்கப்பட்டிருப்பதாவது; "கடந்த பொதுத்தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பெற்றுக்கொண்ட சுமார் 33000 வாக்குகள் அக்கட்சியின் மீது இம்மாவட்ட மக்கள் கொண்ட விருப்பினாலோ, நம்பிக்கையினாலோ அளிக்கப்பட்ட வாக்குகள் அல்ல. மாறாக மு.கா. வின் மீதும், அதன் வேட்பாளர்கள் மீதும் மக்களுக்கிருந்த

எதிர்ப்பலைகளை பதிவு செய்வதற்கு ஒரு களத்தை தேட வேண்டியிருந்தது. அந்த மாற்றுக்களமாக அம்மக்கள் முன் அதாவுல்லாஹ் தலமையிலான தேசிய காங்கிரஸ், ரிஷாட் தலமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகியவையே இருந்தன. முன்னால் அமைச்சர் அதாவுல்லாஹ் மகிந்த

அணியைச்சார்ந்தவர் என்ற அடையாளம் மிகவும் வேரூன்றிக்காணப்பட்டதினாலும், மகிந்த முஸ்லிம்களின் பள்ளிவாசல்களை தகர்த்தெறிந்தவர் என்கின்ற முஸ்லிம்களின் கோப உணர்ச்சிக்கு அகப்பட்டவர் என்பதினாலும், அதாவுல்லாஹ்வை

ஆதரிக்கக்கூடதென்கின்ற உணர்வு வலிமைப்பட்டிதிருந்ததினாலும், அ.இ.ம.கா. மீது இம்மக்களின் பார்வை பற்றிக்கொள்ளத்துவங்கியது. இதனால் கிடைத்த வாக்குகள் தமது கட்சிக்குரிய வாக்குகள் என மனப்பால் குடித்துக்கொண்டு நமது அம்பாறை மாவட்டதில் முஸ்லிம் பிரதேசங்களுக்குள் தமது கால் தடத்தை பெறும் ஆட்டக்களமாக

காண்பிக்கும் தோரணையில் ஆரவாரங்களின் ஈடுபட்டு வருகின்றார். உண்மையில், நல்லாட்சியிலும் முஸ்லிம் விரோதப்போக்குகள் குறிப்பாக பள்ளிவாசல் தாக்குதல்கள் முற்றாக நீங்காத அவல நிலையும்,

அதாவுல்லாஹ் நிரந்தர மகிந்த அணியினர் அல்ல என்பதும் அவர் மைத்திரி சார்பிலும் செல்லக்கூடியவர் என்பதையும் இம்மக்கள் உணரத்தலைப்பட்டுள்ளனர். அதுமாத்திரமன்றி அதாவுல்லாஹ்வின் வெற்றிடம் இப்போது இம்மக்களுக்கு பாரிய இழப்புக்குரியது என்பதும் வெட்ட வெளிச்சமாக புரியத்தொடங்கி உள்ளது.

இந்நிலையானது எதிர்காலத்தில், அதாவுல்லாஹ்வின் கரங்கள் வலிமைப்படுவதை நமக்கு உறுதி செய்கின்றது. இதன் மறுதலை அமைச்சர் ரிஷாட்டின் அம்பாறை மாவட்ட ஆடுகளம் விரைவில் காலியாகிவிடும் ஆபத்தில் இருப்புக்கொண்டுள்ளது என்பதை நமக்கு

தெளிவாக உணர்த்தி நிற்கின்றது. அத்துடன் இப்போது அம்பாரை மாவட்டத்தில் நான்கு கூட்டுத் தாபனங்களுக்கு தலைவர்களாக நியமிக்கப்பட்டுளவர்கள் மக்கள் மத்தியில் தற்போது எந்த செல்வாகும் அற்றவர்கள் இவர்களை வைத்துக் கொண்டு தனது வாக்கு வண்டியை அம்பாரை மாவட்டத்தில் முன்னோக்கி நகர்த்தி விடலாம் என நினைக்கும் றிஷாட் பதியூதீனின் என்னமானது அவரின் அரசியல்

முதிர்சியின்மையை புடம் போட்டு காட்டுவதாகவே நான் நினைக்கின்றேன். வருகின்ற உள்ளூராசி மன்ற தேருதலில் நாங்கள் தனித்து போட்டியிடுவோ அல்லது ஒரு காத்திரமான அனியுடன் சேர்ந்து ஒரு வலுவான வெற்றியை பெறுவோம்.

இதன் பெறுபேறாக, அம்பாறை மாவட்டத்தில் அமைச்சர் காட்டிவரும் கரிசணை படிப்படியாக முன்னேறிவருவதாக அவர்கள் நம்பினாலும், யதார்த்தம் வேறுவிதமாக இருக்கின்றது. உண்மையில், ரிஷாட்டின் ஆட்டம் களத்திலிருந்து முற்றாக வெளியேறும் நகர்வுகள் உக்கிரமடைந்து காணப்படுகின்றது." என அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊடகப் பிரிவு அல்ஹாஜ். நாபீர் உதுமான்கண்டு தலைவர், நாபீர் பவுண்டேஷன் முகாமைத்துவ பணிப்பாளர், ECM (PVT) LT

செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog