Breaking

Friday

கல்முனையிலிருந்து NAITA வின் மாவட்ட காரியாலயம் அம்பாறைக்கு இடமாற்றம்..!


By-Mufaris M. Haniffa

இந்த முறை, 19 வருடங்களாக கல்முனையில் இருந்து பல ஆயிரம் பயிலுனர்களை பயிற்றுவித்த NAITA வின் மாவட்ட காரியாலயம் எதிர்வரும் 15ம் திகதியிலிருந்து அம்பாறைக்கு இடமாற்றப்படவுள்ளது.

காலா காலமாக கல்முனையிலுள்ள பல காரியாலயங்கள் அழேக்கா... தூக்கி எடுத்துச் செல்லப்பட்ட வரலாற்று வரிசையில் சில மாதங்களுக்கு

அப்போது தன் இயழாமையே சுமத்த அதாவுல்லா என்ற ஒராள் பயன்பட்டார். தற்பொழுது தயா கமகே அந்த இடத்தை நிரப்புகிறார்.
"எங்கள் மண்ணின் மைந்தன் ஊரில் இல்லாமல் லண்டனுக்கு போனதினால் தான் இப்படி நடந்துவிட்டது, ஊரில் இருந்தால் ஒரு 

கை பார்த்துவிட்டிருப்போம்" என அவர் விசுவாசிகள் தன் விசுவாச பரப்புரையை மேற்கொள்ள ஆரம்பித்துவிட்டார்கள் ஒரு புறம்.
மறுபுறம், மூக்கா போராளிகள் சிலர் இந்தப் பலியை 33,000 வாக்கை கணக்கு காட்டி மாக்கா ஏன் இதை தடுக்கவில்லை என மயிலில் சுமத்த, மாக்கா ஏன் மூக்காவால் தடுக்க முடியவில்லை என பட்டி மன்றம் நடக்கின்றது.

இன்னும் சில 'நடுச்சென்டர்'வாதிகள், தயா கமகே அவன் எப்படி இப்படி செய்வான். முஸ்லிம்களும் அவருக்கு வாக்கு போட்டதுதானே என தங்களது ரோசம் கலந்த ஆக்ரோசத்தை வெளிப்படுத்தி கூவுகிறார்கள்.

அந்த வகையில் பொது மக்களாகிய நாமும் ஏதும் ரியாக்சன் கொடுக்க வேண்டும் இல்லையா? ஒன்னு பண்ணுவோம்...
எதிர்வரும் ஜும்மாஹ்க்கு பிறகு பெரிய பள்ளிவாசலுக்கு முன்பாக நாலு டயரை ரோட்டுக்கு குறுக்கால போட்டு, தயா கமகேவின் கொடும்பாவியை எரித்து, கூடவே 'நாரே தக்பீர்' முழங்க தங்கள் ஆத்திரத்தையும், ஆக்ரோசத்தையும் வெளிப்படுத்தி பின்பு வீடுகளுக்கு செல்வோம்.

நம் கடமையும் முடிந்துவிடும். ஆகவே போராளிகளே புறப்படுவோம்.

செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog