Breaking

Tuesday

முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்திற்காக, விக்னேஸ்வரனிடம் கெஞ்சமாட்டோம் - றிசாத் சூளுரை


முஸ்லிம்கள் விவகாரத்தில் வடக்கு மாகாண சபை மிகவும் ஆபத்தானது போன்று அதன் முதலமைச்சர் விக்னேஸ்வரன் முஸ்லிம்களை கேவலப்படுத்துவதில் தீவிரம் காட்டுவதாக் அமைச்சர் றிசாத் பதியுதீன் பகிரங்கமாக குற்றம் சுமத்தினார்.

வடக்கு முஸ்லிம்களுக்கு எதிரான புலிகளின் 26 ஆவது பலாத்கார இனச்சுத்திகரிப்பின் கறுப்பு ஒக்டோபர் நிகழ்வு, பிரான்சில் நடைபெற்றது. இந்நிகழ்வில் உரையாற்றும் போதே றிசாத் பதியுதீன் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் உரையாற்றும் போது தெரிவித்ததாவது,

வடக்கு முஸ்லிம்கள் விவகாரத்தில் மாறிமாறி பதவிக்கு வந்த அரசாங்கங்களும் சரி, அரச சார்பற்ற நிறுவனங்களும் சரி அசமந்தப் போக்குடன் செயற்படுகின்றன. இதனால் வடக்கு முஸ்லிம்களின் அவலங்கள்  மறைக்கப்படுகின்றன. வடக்கிலிருந்து முஸ்லிம்களாகிய நாம் பயத்தினால் வெளியேறவில்லை. நாங்கள் கலீமா சொல்லியிருந்தோம். நாங்கள் முஸ்லிம்களாகியிருந்தோம். அதனால்தான் வெளியேற்றப்பட்டோம். வடக்கு முஸ்லிம்கள் பயங்கரவாதப் புலிகளினால் இனச்சுத்திகரிப்பு செய்யப்பட்ட போது தமிழ் மக்கள் சக்தியற்றிருந்தனர். இதுவே உண்மையாகும்.

தற்போது வடக்கில் மீள்குடியேறியுள்ள முஸ்லிம்கள் மிகுந்த கஷ்டப்படுகின்றனர். அவர்களின் அடிப்படைத் தேவைகள் நிறைவேற்றப்படவில்லை.  அவர்களின் பிரச்சினை தீர்க்கப்படவில்லை. முஸ்லிம்களின் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டுமென்பதில் தமிழ் தலைவர்களான சம்பந்தன், சுமந்திரன், மாவை மற்றும் சத்தியலிங்கம், டெனீஸ்வரன் ஆகியோர்  ஆர்வமாக உள்ளனர். நிரந்தர அரசியல் தீர்வை தமிழ் சமூகம் எதிர்பார்க்கிறது. அதற்கு குறுக்காக முஸ்லிம்கள் நிற்கமாட்டார்கள்.

இருந்தபோதும் வடமாகாண சபையிடமிருந்தும், முதலமைச்சர் விக்னேஸ்வரனிடமிருந்தும் சாதக நிலைப்பாட்டை காணவில்லை. வடக்கு மாகாண சபை முஸ்லிம்களுக்கு ஆபத்தாக உள்ளது. விக்னேஸ்வரன் முஸ்லிம்களை கேவலப்படுத்துகிறார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் வடமாகாண சிங்கள முஸ்லிம் மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்த செயலணி அமைக்கப்பட்டது. எனினும் வின்னேஸ்வரன் அதற்கு எதிராக அறிக்கை வெளியிட்டார். 

தற்போது வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்திற்கு தடை போடுகிறார். சில சக்திகளின் கைப்பிள்ளையாக அவர் செயற்படுகிறார் என சிந்திகத் தோன்றுகிறது. தமது வீட்டில் ஒரு முஸ்லிம் மரத்தை வெட்டியதற்காக, ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தை கேவலப்படுத்தி, வேதனைப்படுத்தியவர்தான் இந்த விக்னேஸ்வரன்.

இதற்காக நாம் விக்னேஸ்வரனிடம் கெஞ்சத் தேவையில்லை. ஒரு சமூகம் தமது தாயகத்தில் மீள்குடியேறுவதற்கு அவர் தடை போடுகிறார் என்றால் அவர்  வழிகேடுக்கிறார் என்பதுதான் அர்த்தம்.

எனவே இவ்வாறான சூழ்ச்சிகளை தகர்த்து, தடைகளை நீக்க வேண்டுமாயின் நாம் ஒன்றுபட வேண்டும். அப்போதுதான் வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் சாத்திமாகும் எனவும் அமைச்சர் றிசாத் பதியுதீன் மேலும் குறிப்பிட்டார்.
செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog