Breaking

Thursday

மீனவர்கள் எதிர்நோக்கி வந்த நீண்ட கால பிரச்சினைக்கு நேற்று தீர்வு..!


குளத்தில் மீன்களின் எண்ணிக்கை குறைவடைந்து வருவதும் மீன் பிடி அனுமதிப்பத்திரம் இல்லாமையும் இப்பிரதேசத்து மக்களுக்கு பெரும் பிரச்சினையாக இருப்பதை கவனத்திற்கு கொண்டு வந்த திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைவருமான எம்.ஐ.எம் மன்சூர் அவரகள் அயராத முயட்சியால் மீன் வளர்ப்பு அதிகார சபையினால்

 சுமார் 1 மில்லியன் ரூபா பெறுமதியான நன்னீர் இன 1 இலட்சம் மீன் குஞ்சுகள் இன்று குளத்தில் விடப்பட்டதோடு மீன் பிடி அனுமதிப்பத்தியமும் வழங்கப்பட்டது இந்நிகழ்வில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் மன்சூர் அவர்களுடன் அம்பாறை மாவட்ட மீன் வளர்ப்பு அதிகார சபையின் பணிப்பாளர் ரொஹான் அவர்களும் இறக்காம பிரதேச செயலாளர் நசீர் DS அவர்களும்

பாராளுமன்ற உறுப்பினரின் செயலாளர் சட்டத்தரணி சஹூபீர் அவர்களும் இறக்காம பிரதேச ஒருங்கிணைப்பு குழு இணைத்தலைவர் எஸ்.ஐ.மன்சூர் அவர்களும் இறக்காம பிரதேச சபையின் முன்னாள் தலைவர் நைசர் அவர்களும் மீனவர்களும் மற்றும் பொது மக்களும் கலந்து சிறப்பித்தனர்.

இதன் போது மீனவர்களினால் அம்பாறை மாவட்ட மீன் வளர்ப்பு அதிகார சபையின் பணிப்பாளர் ரொஹான் அவர்களுக்கு நினைவுச்சின்னம் ஒன்றும் வழங்கி வைக்கப்பட்டது.

செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog