Breaking

Wednesday

தொலைபேசியை கண்டுபிடிக்க 4 வயது சிறுமி நரபலி கொடுக்கப்பட்ட கொடூரம்..!


காணாமல் கையடக்க தொலைபேசியை கண்டுபிடிக்க 4 வயது சிறுமியின் தலையை துண்டித்து நரபலி கொடுக்கப்பட்ட கொடூர  சம்பவம் இந்தியாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அசாம் மாநிலம் ஜரைடோ மாவட்டத்தில் உள்ளது ரத்னாபூர் கிராமம். இங்கு ஆதிவாசி மக்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர்.

இந்த ஊரை சேர்ந்த சோனுகுத்பா (வயது 4) என்ற சிறுமியை கடந்த 24-ம் திகதி காணாமல் போயுள்ளார்.

இந்த நிலையில் இந்த சிறுமி அங்குள்ள காட்டுப் பகுதி ஒன்றில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சடலமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவளது 2 கைகளும் துண்டிக்கப்பட்டு இருந்தன.

அந்த இடத்தில் பூஜை செய்ததற்கான அடையாளங்களும் இருந்தன. எனவே, சிறுமியை நரபலி கொடுத்து இருப்பது தெரிந்தது. இது பற்றி பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டது. பொலிசார் விசாரணை நடத்தி வந்தனர்.

அதில், அதே பகுதியை சேர்ந்த அப்துல் ஜலீல் என்ற மந்திரவாதி சிறுமியை நரபலி கொடுத்தது தெரிய வந்தது. காணாமல் போன கையடக்க தொலைபேசியை கண்டுபிடிப்பதற்காக சிறுமியை நரபலி கொடுத்து இருப்பதும் தெரிந்தது.

அதே பகுதியை சேர்ந்த அனுமான் பூமிஜி என்பவருடைய மகள் கையடக்க தொலைபேசியை தொலைத்து விட்டார். அதை கண்டுபிடிப்பதற்காக மந்திரவாதி அப்துல் ஜலீலை அனுமான் பூமிஜி நாடினார்.

அப்போது அப்துல் ஜலீல் நரபலி கொடுத்தால் கையடக்க தொலைபேசியை கண்டுபிடித்து விடலாம் என கூறினார். அதன்படி நரபலி கொடுப்பதற்காக 4 வயது சிறுமியான சோனுகுத்பாவை கடத்தி சென்றனர். பின்னர் காட்டில் வைத்து கொலை செய்து பூஜை செய்தனர்.

இது தொடர்பில் பொலிசார் அனுமான் பூமிஜி, அப்துல் ஜலீலின் உதவியாளர் அரி புல் அலி மற்றும் 2 பேரை கைது செய்துள்ளனர்.

மந்திரவாதி அப்துல் ஜலீல் தலைமறைவாகி விட்டார். அவரை தேடி வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog