Breaking

Wednesday

தமிழ் மற்றும் முஸ்லிம் தலைமைகள் தூரநோக்குடன்...!சிறுபான்மை மக்களின் எதிர்கால நலனைக் கருத்திற் கொண்டு தமிழ் மற்றும் முஸ்லிம் தலைமைகள் தூரநோக்குடன் செயற்பட வேண்டும். மிகவும் முக்கியமான மற்றும் அரசியல் ரீதியான தீர்க்கரமான தற்போதைய சூழலில் முரண்பாடுகளை வளர்த்துக் கொண்டு செல்வதன் மூலம் எதனையும் அடைந்து கொள்ளமுடியாது. 

மாறாக சமயோசிதமாகவும், சாணக்கியமாகவும், புத்திசாலித்தனத்துடனும் செயற்படுவதனூடாகவே நியாயமான தீர்வுத் திட்டத்தை பெற்றுக் கொள்ளமுடியும். என திகாமடுல்ல மாவட்ட ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினரும், அம்பாறை மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவருமான எம்.ஐ.எம். மன்சூர் தெரிவித்தார்.

சம்மாந்துறை ஶ்ரீகோரக்கர் தமிழ் மகாவித்தியாலயத்தின் வருடாந்த பரிசளிப்பு விழா (08) அதிபர் எம்.விஜயகுமாரன் தலைமையில் நடைபெற்றது. அதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையிலே – நியாயமான விட்டுக்கொடுப்போடு தமிழ், முஸ்லிம் உறவு கட்டியெழுப்பப்பட வேண்டும் என்ற நிலைமை இன்று தவிர்க்க முடியாதொன்றாகும். 

எமது பிரதேசத்தில் தமிழ், முஸ்லிம் மற்றும் கிறிஸ்வ மதங்களைச் சேர்ந்த மாணவர்கள் கல்வி கற்கும் மிக முக்கியமான இந்த பாடசாலையாகும். கடந்த காலங்களில் பல்வேறு சிறந்த அடைவுகளைப் பெற்றுள்ளமையிட்டு மிக்க மகிழ்சியடைகின்றேன். எதிர்காலத்தில் சிறந்த பாடசாலையாக அமையும் 

ஒருகாலத்தில் தழிழ் ஆசிரியர்கள் தமிழ் பாடசாலைகளிலும், முஸ்லிம் ஆசிரியர்கள் முஸ்லிம் பாடசாலைகளிலும் மட்டும் கற்பிப்பவர்களாக இருந்தார்கள். இந்த நிலைமை மாற வேண்டும். அண்மைக்காலங்களில் முஸ்லிம் ஆசிரியர்கள் தமிழ் பாடசாலைகளுக்கு இடமாற்றப்பட்டார்கள். அது தமிழ் பாடசாலை எனக்கு செல்ல முடியாது என்று கூறிய ஆசிரியர்கள் நான் கடிந்து கொண்டேன். தற்போதைய சமாதான சூழலில் அனைத்து ஆசிரியர்கள் தமிழ் மற்றும் முஸ்லிம் பாடசாலை என்று பாராது கற்பிக்க முன்வர வேண்டும்.
அண்மையில் இறக்காமம் மாணிக்கமடு மாயக்கல்லி மலையில் புத்தர் சிலை வைக்கப்பட்டமையானது கடந்த அரசாங்கம் சிறுபான்மையினர் மீது கொண்டிருந்த கொள்கையினை தற்போதைய நல்லாட்சி அரசாங்கமும் நடைமுறைப்படுத்த முனைவதை விளங்கிக் கொள்ள முடிகிறது. 
நல்லாட்சியை சரிவரக் கொண்டு செல்ல முயன்றாலும் அந்த நல்லாட்சியை பௌத்த கரும் போக்குவாதத்தை தடுத்து நிறுத்துகின்ற செயற்பாட்டைக் காணமுடியவில்லை.
இன்று ஒவ்வொரு இனத்திற்குள்ளும் இருக்கின்ற அரசியல் வங்குரோத்து அடைந்துள்ள புல்லூருவிகள் பௌத்த கடும்போக்கு இனவாத சக்திகளோடு உறவுகளை பேணிக்கொண்டு மீண்டும் மக்களின் செல்வாக்கினை பெற்றுக்கொள்ளும் நோக்கில் சிலையினை அவருடைய அனுசரணையோடு என்றும் இவருடைய அனுசணையோடு வைத்துள்ளார்கள் மக்கள் மத்தியில் பொய்களை பறப்பி சில்லரை அரசியல் செய்கின்ற சக்திகள் குறித்து மக்கள் மிக விளிப்பாக இருக்க வேண்டும்.கடந்த காலங்களில் பல தேர்தல்களில் தோல்வியுற்ற அமைச்சர் தயா கமகே கடந்த பொதுத்தேர்தலிலே அம்பாறை மாவட்டத்து முஸ்லிம்களுடைய வாக்குகளை பெற்று அதிகாரத்தினை பெற்றற்கு பிற்பாடு இன்று இறக்காமம் மாணிக்கமடு பிரதேசத்தில் புத்தர் சிலை வைக்கப்பட்டது சம்பந்தமாக 


தெரிவித்துள்ள கருத்துக்களை பார்க்கின்ற பொழுது அவருக்கு வாக்களித்த அம்பாறை மாவட்ட முஸ்லிம்களுக்கு செய்துள்ள மிக பெரிய துரோகமாகும். அதுமட்டுமல்லாமல் கடந்த மஹிந்த ராஜபக்‌ஷவின் ஆட்சிக்காலத்தினை விடவும் அதிகமான தொனியிலே சிறுபான்மை மக்களை நசுக்குகின்ற விடயமாகவும், சர்வதேசம் பார்க்கும் அளவிற்கு துரோகத்தன்மை வாய்ந்ததாகவும் இருக்கின்றது.


எனவே, நிலையான விட்டுக்கொடுப்போடும் தமிழ், முஸ்லிம் உறவு கட்டியெழுப்பட வேண்டும். இதற்கு தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல் தலைமைகள் இதனை புரிந்து கொண்டு இயங்க வேண்டும்.
இந்நிகழ்வில் கிழ்ககு மாகாண சபை உறுப்பினர் கலையரசன், சம்மாந்துறை பிரதேச செயலாளர் ஏ.மன்சூர்,சம்மாந்துறை வலயக் கல்விப்பணிப்பாளர் எம்.எம்.எஸ். நஜீம், வலயக் கல்வி அலுவலக அதிகாரிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்கள்.

By-Ansar Cassim


செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog