Breaking

Tuesday

அதிகம் வாசியுங்கள் அதிககாலம் உயிர் வாழுங்கள்...! ஆராய்ச்சி.


“கண்டது கற்றவன் பண்டிதனாவான்” என்பது பழமொழி, அதிகம் படிப்பவன் நீடூழி காலம் வாழ்வான் என்பதை புதுமொழி என்றே கூறலாம். அந்தளவுக்கு வாசிப்பிற்கும், ஆயுளுக்கும் தொடர்பு இருப்பதை அமெரிக்க விஞ்ஞானிகள் ஆய்வுகள் மூலம் கண்டறிந்துள்ளனர்.

ஐம்பது வயதைத் தாண்டிய 3700 பேரிடம் மேற்கொண்ட ஆய்வின் மூலமே இவ்வுண்மை கண்டறியப்பட்டுள்ளது. அமெரிக்க யேல் பல்கலைக்கழகம் மேற்கொண்ட இவ்வாய்வில், மனிதர்களின் வாழ்க்கைமுறை, வாசிப்புப் பழக்கம் மற்றும் ஆயுள் என்பவற்றுக்கிடையிலான தொடர்பைக் கண்டறிவதே நோக்காக இருந்தது.

காலையில் எழுந்து செய்தித்தாளையோ, அல்லது ஃபேஸ்புக்கில் ஸ்டேட்டஸ் வாசிப்பதையோ இவ்வாய்வில் கருதவில்லை. மாறாக அமைதியான ஒரு இடத்தில் இருந்து குறைந்தது 5 நிமிடங்களாவது புத்தகம் வாசிப்பதையே இங்கு ஆய்வுக்கு எடுத்துக்கொண்டனர்.

எம்மைக்கவர்ந்த ஒரு புத்தகத்தை நன்கு கவனம் செலுத்தி வாசிக்க ஆரம்பித்து முதல் 6 நிமிடங்களிலேயே மன அமைதி கிடப்பதாக அவ்வறிக்கை கூறுகிறது. மேலும் மூளை கூர்மையடைவதோடு, ஞாபக சக்தியும் அதிகரிக்கின்றது.

எமது தூக்கத்தைப் பாதிக்கும் நீலக்கதிர்களைக் கக்கும் திரைகளை(TV, Laptop, Mobile) பார்ப்பதைத் தவிர்த்து, அரை மணி நேரம் புத்தகம் ஒன்றை வாசிப்பதால் மேற்கூறிய நன்மைகளுக்கு மேலதிகமாக, தூக்கமாத்திரையின்றி நன்கு தூங்கலாம்.
செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog