Breaking

Thursday

சம்மாந்துறை பிரதேச அபிவிருத்திக் குழுக்கூட்டம்...


நாட்டில் பாரிய பொருளாதார நெருக்கடியினை எதிர்கொண்டுவருகின்ற நிலைமைமயில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான நல்லாட்சி அரசாங்கம் இலஞ்ச ஊழலை சமூகத்திலிருந்து இல்லாதொழித்து சிறந்த நாடென்றைக் கட்டியெழுப்புவதற்கான பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது. இவ்வாறான நிலையில் 

அரசாங்கத்தின் திட்டங்களையும், கொள்கைகளையும் மேற்கொள்வதற்கும் அதனை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவதற்கும் மக்கள் பிரதிநிதிகளுடன் அரசாங்க அதிகாரிகள் இணைந்து அற்பணிப்புடன் செயற்பட்டு புரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும். என திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், சம்மாந்துறை பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுவின் தலைவருமான எம்.ஐ.எம். மன்சூர் தெரிவித்தார்.

சம்மாந்துறை பிரதேச அபிவிருத்திக் குழுக்கூட்டம் இன்று(15) வியாழக்கிழமை அபிவிருத்திக்குழுவின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஐ.எம். மன்சூர் தலைமையில் சம்மாந்துறை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கடந்த அரசாங்கத்தின் நாட்டில் கடன்பழுவை சுமர்ந்து கொண்டு பல்வேறு பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் அபிவிருத்திப் பணிகளை நல்லாட்சி அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது. நாட்டின் வருமானத்தை அதிகரித்து பொருருளாதாரத்தை கட்டியெயழுப்ப வேண்டியுள்ளது. நல்லாட்சியை அடிப்படையாகக் கொண்ட எதிர்காலத்தை கட்டியெழுப்பவே நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.

இக்கூட்டத்தில் யுத்தத்தினால் இடபெயர்ந்த குடும்பங்களை மீள்குடியேற்றம், குடியிருப்புக் காணி கோரி சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களை ஆராய்தல், தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் நிர்மாணிக்கப்பட்ட வீட்டுத்திட்டங்கள் அமைத்தல், இளைஞர் படையணி பயிற்சி மத்திய நிலையம் அமைத்தல், பினியாய்வு நிலையம் அமைத்தல் போன்ற முன்மொழிகள் கலந்துரையாடப்பட்டதுடன், பன்முகப்படுத்தப்பட்ட 

வரவு- செலவுத்திட்ட நிதி ஒதுக்கீட்டு, கிராமிய உட்கட்டமைப்பு அபிவிருத்தி வேலைத்திட்டம் மற்றும் பிரதேச செயலகப் பிரிவுகளில் மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டு தீர்த்துவைக்கப்பட்டன.

இதில் சம்மாந்துறை பிரதேச செயலாளர் ஏ.மன்சூர், பிரதேச சபை செயலாளர் ஏ.எம்.சலீம், பிரதம நம்பிக்கையாளர் எம்.கே. முஸ்தபா உட்பட அரச திணைக்களங்களில் தலைவர்கள், பொதுநல அமைப்புக்களின் பிரதிநிதிகள், உத்தியோகத்தர்கள் பலர் கலந்து கொண்டனர்கள்.
by-Ansar Cassim
செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog