Breaking

Friday

கல்வி தொடர்பில் அவதானம் செலுத்துங்கள்: கிழக்கு மாகாண கல்வி அமைச்சருக்கு உதுமாலெப்பை அவசரக் கடிதம்.


(எம். ஜே.எம். சஜீத்)

கல்முனை வலயப் பாடசாலைகளிலிருந்து 29 ஆசிரியர்கள் இரண்டு வருட சேவைக்கால நிபந்தனையுடன் அக்கரைப்பற்று வலயத்திற்குட்பட்ட அட்டாளைச்சேனை கோட்டப் பாடசாலைகளுக்கு கடந்த 2014ஆம் ஆண்டு கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளரினால் இடமாற்றம் செய்யப்பட்டனர். மேற்குறித்த ஆசிரியர்களின் இரண்டு வருட சேவைக்காலம் தற்போது நிறைவுபெற்றுள்ளது.

மேற்குறித்த ஆசிரியர்கள் எதிர்வரும் 2017ஆம் ஆண்டு முதல் கல்முனை வலயப் பாடசாலைகளில் தங்களது கடமைகளைப் பொறுப்பேற்கவுள்ளதனால் அட்டாளைச்சேனை கோட்டப்பாடசாலைகளில் 29ஆசிரியர்கள் வெற்றிடம் ஏற்பட்டு அப்;பாடசாலைகளின் கல்வியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தவுள்ளதாக கிழக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் எம்.எஸ் உதுமாலெப்பை தெரிவித்தார்.

இதுதொடர்பில் கிழக்கு மாகாண கல்வி அமைச்சரை தெலைபேசியில் தொடர்புகொண்டு பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதுமாலெப்பை அவ்விடயம் தொடர்பில் அவசரக் கடிதம் ஒன்றினையும் நேற்று (14) கல்வி அமைச்சருக்கு அனுப்பி வைத்துள்ளார்.

அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது…

கல்முனை வலயப் பாடசாலைகளிலிருந்து 29 ஆசிரியர்கள் இரண்டு வருட சேவைக்கால நிபந்தனையுடன் அக்கரைப்பற்று வலயத்திற்குட்பட்ட அட்டாளைச்சேனை கோட்டப் பாடசாலைகளுக்கு கடந்த 2014.08.01ஆம் திகதி முதல் கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளரினால் இடமாற்றம் செய்யப்பட்டனர். மேற்குறித்த ஆசிரியர்களின் இரண்டு வருட சேவைக்காலம் கடந்த 2016.08.01ஆம் திகதியுடன் நிறைவுபெற்றது.

அட்டாளைச்சேனை பிரதேச கல்விச் சமூகம் கேட்டுக்கொண்டதற்கினங்க மாணவர்களின் கல்வியை பாதிக்காத வகையில் நன்னோக்கத்தின் அடிப்படையில் 2016.12.31ஆம் திகதி வரையும் அவ் ஆசிரியர்கள் அட்டாளைச்சேனை கோட்டப்பாடசாலைகளில் சேவையாற்ற இணக்கம் தெரிவித்தனர்.

இவ் ஆசிரியர்கள் எதிர்வரும் 2017.01.01ஆம் திகதி முதல் கல்முனை வலயப் பாடசாலைகளில் தங்களது கடமைகளைப் பொறுப்பேற்கவுள்ளனர். இதன் காரணமாக அட்டாளைச்சேனை கோட்டப்பாடசாலைகளில் 29ஆசிரியர்கள் வெற்றிடம் ஏற்படவுள்ளதுடன்,அப்;பாடசாலைகளின் கல்வியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தவுள்ளது.

எனவே இவ்விடயத்தினைக் கவனத்திற்கொண்டு பதில் ஆசிரியர்கள் 29பேரை அட்டாளைச்சேனை கோட்டத்திற்கு நியமிக்கஅவசர ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளுகின்றேன். மேற்குறித்த விடயமாக தங்களுடன் தொலைபேசியூடாகவும் பேசியுள்ளேன் என்பதனை நினைவூட்ட விரும்புகின்றேன்.

கடந்த வருடம் கல்முனை வலயத்திலுள்ள மேலதிக ஆசிரியர்களிருந்து 19பேர் இரண்டு வருட ஒப்பந்தத்தின் அடிப்படையில் பொத்துவில் உப வலயப் பாடசாலைகளில் இரண்டு வருட சேவைக்காலத்தை பூர்த்தி செய்துவிட்டு கல்முனை வலயப் பாடசாலைகளில் மீண்டும் கடமைகளைப் பொறுப்பேற்க கடிதங்கள் வழங்கப்பட்ட போது குறித்த 19ஆசிரியர்களுக்குப் பதிலாக ஆசிரியர்களை நியமிக்குமாறு நானும் பொத்துவில் சமூகமும் தங்களிடம் முன்கூட்டியே நேரடியாக கோரிக்கை விடுத்தோம்.

இந்த விடயமாக தாங்களும் கல்வி அமைச்சின் அதிகாரிகளும் அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ளாததனால் பொத்துவில் பிரதேச மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டதுடன் பொத்துவில் பிரதேசத்தில் ஆர்ப்பாட்டங்களும், போராட்டங்களும் இடம்பெற்றது.மேலும் இவ்விடயமாக பல உயர்மட்ட கலந்துரையாடல்களும் இடம்பெற்று பொத்துவில் உப வலய பாடசாலைகளுக்கு ஆசிரியர்களை அவசரமாக வழங்க வேண்டிய சூழ்நிலை எமக்கு ஏற்பட்டது.

எனவே பொத்துவில் பிரதேசத்தில் இடம்பெற்ற சம்பவங்களைப் போன்று அட்டாளைச்சேனை பிரதேசத்திலும் இடம்பெற வழிவகுக்காமல் அட்டாளைச்சேனை கோட்டப் பாடசாலைகளில் ஏற்படப்போகும் ஆசிரியர் பற்றாக்குறையினை நிவர்த்தி செய்யும் வகையில் 2017.01.01ஆம் திகதி முதல் பதில் ஆசிரியர்களை நியமிக்க அவசர ஏற்பாடுகளை மேற்கொண்டு இப்பிரதேச கல்வியின் வளர்ச்சிக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு இப்பிரதேச மக்களின் சார்பாக கேட்டுக்கொள்கின்றேன் என அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog