Breaking

Thursday

மெக்சிக்கோ தலைநகரின் வடக்கில் பட்டாசு வர்த்தக நிலையத்தில் நிகழ்ந்த வெடிச்சம்பவம்...!பலியானோர் எண்ணிக்கை அதிகரிப்பு.


மெக்சிக்கோ தலைநகரின் வடக்கில் பட்டாசு வர்த்தக நிலையத்தில் நிகழ்ந்த வெடிச்சம்பவத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

சன் பெப்ளிடோ வர்த்தக நிலையத்தில் நத்தார் விடுமுறைக்காக பெருமளவு பட்டாசுகளும், வான வேடிக்கைகளும் சேகரித்து வைக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் ஒரு கடையில் ஆரம்பித்த வெடிப்பு, தொடர்ச்சியாக அடுத்த கடைகளுக்கும் பரவி பேரனர்த்தம் நிகழ்ந்தது.

இந்த வெடிப்பு சம்பவத்தில் 31 பேர் வரை பலியானதுடன் 72 பேர் காயமடைந்து சிகிச்சை பெறுவதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இங்கு 2005ஆம் ஆண்டுக்கு பின்னர் மூன்று தடவைகள் விபத்துக்கள் நிகழ்ந்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog