Breaking

Thursday

கிழக்கு மாகாண அமைச்சுக்களின் நிதி ஒதுக்கீடுகளுக்கு அந்த அந்த அமைச்சர்களே பொறுப்புக் கூற வேண்டும்.


(எம்.ஜே.எம்.சஜீத்)

கிழக்கு மாகாண அமைச்சுக்களின் நிதி ஒதுக்கீடுகளுக்கு அந்த அந்த அமைச்சர்களே பொறுப்புக் கூற வேண்டும்

எதிர்க்கட்சித் தலைவர் எம்.எஸ்.உதுமாலெப்பை

கிழக்கு மாகாண அமைச்சுக்களினால் அபிவிருத்திக்காக நிதி ஒதுக்குகின்ற போது அந்த அந்த அமைச்சர்களே பொறுப்பு ஏற்க வேண்டும் . நிதி ஒதுக்கீடுகளின் விடயத்தில் அதிகாரிகளின் மீது பழிகளை சுமத்தி விட்டு அமைச்சர்கள் பொறுப்பற்றவர்களாக செயற்படக் கூடாது. கிழக்கு மாகாண சுகாதார அமைச்சினால் 

வைத்தியசாலை அபிவிருத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதியில் சமநிலை பேணப்படவில்லை எனவும் இதற்கு அதிகாரிகள்தான் பொறுப்பு எனவும் பழி சுமத்தப்படுகின்றது. அம்பாறை மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இடம் பெற்ற போது

 ஒரிலட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் வாழும் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு கிழக்கு மாகாண சுகாதார அமைச்சினால் நாற்பதாயிரம் மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளதாக அம்பாரை மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவரும், பாராளுமன்ற 

உறுப்பினருமான மன்சூரினால் குற்றம் சுமத்தப்பட்டது. இது தொடர்பாக சரியான விளக்கங்களை அளிக்க முடியாமல் மாகாண சுகாதாரத் துறை அதிகாரிகள் தடுமாற வேண்டிய சூழ்நிலை 

ஏற்பட்டது. இவ்வாறான செயற்பாடுகளினால் கிழக்கு மாகாண சபைகளின் நடவடிக்கைகளுக்கு களங்கம் ஏற்படுகின்றது. எனவே அடுத்த வருட கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் வைத்;தியசாலையின் அபிவிருத்திற்காக நிதி ஒதுக்கும் பொறுப்பினை கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் 

பொறுப்பெடுத்து கிழக்கு மாகாணத்தில் மூவின மக்கள் வாழும் பிரதேசங்களுக்கு சமமான வகையில் நிதி ஒதுக்கீடுகள் மேற் கொள்ளப்படவேண்டும் என கிழக்கு மாகாண சுகார அமைச்சின் வரவு செலவுத் திட்ட விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய எதிர்க்கட்சி தலைவர் எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தார்.


கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரும், உயர் அதிகாரிகளும் எமது சுகாதாரத் துறைக்கு ஆற்றும் நல்ல பணிகளுக்கு மக்கள் சார்பாக நான் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். 

வைத்தியசாலைகளின் அபிவிருத்திகளைப் பொறுத்தவரை ஒரு போதும் இன, பிரதேச பாகுபாடுகளின்றி நாம் செயற்பட வேண்டியுள்ளது. கிழக்கு மாகாணத்தில் வாழும் மூவின மக்களின் சுகாதாரத் தேவைக்கு நமது வரலாற்றில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பாரிய பங்கினை வகித்துள்ளது. 

அதேபோன்று அம்பாறை வைத்தியசாலையும் மூவின மக்களின் சுகாதாரத் தேவைக்கு பாரிய பங்கினை வகித்துள்ளது. கிழக்கு மாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகள் அபிவிருத்தி செய்வதன் கூடாக மூவின மக்களும் பயன் பெறக்கூடிய நிலமை ஏற்படும்.

சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையானது கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பிரிவிலுள்ள பிரதான வைத்தியசாலையாகும். இது சேவைக்கான புள்ளி விபரங்களோடு ஒப்பிடும் போது மிகப் பழமையான கட்டிடங்களையும் மிகக் குறைந்த ஆளணிகளையும் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகளையும் கொண்டே இயங்குகின்றது. இது 2007ஆம் ஆண்டு ஆதார 

வைத்தியசாலையாகத் தரமுயர்த்தப்பட்டதில் இருந்து பிரதானமான 04 வைத்திய நிபுணர்களையும், ஏனைய உத்தியோகத்தர்கள், ஊழியர்களையும் கொண்டு சுமார் ஒரு இலட்சத்துக்கு மேற்பட்ட சம்மாந்துறையையும் அதை அண்டியுள்ள அயற் கிராம 

மக்களுக்கும் சிறப்பான சேவையை ஆற்றி வருகின்றது. இருந்த போதும் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் நோயாளர்களுக்கு சிறப்பான சேவையை வழங்க வசதிகள் போதாமையாக இருக்கின்றது.

இவ் வைத்தியசாலையில் தற்போது நாளாந்தம் சராசரியாக 130 நோயாளர்கள் தங்கிச் சிகிச்சை பெறுவதுடன், சிறிய, பெரிய சத்திர சிகிச்சைகளும் மாதாந்தம் 150 பிரசவங்களும் நடைபெறுகின்றது.
இங்கு கடமை புரியும் 60 சிற்றூழியர்களில் 25க்கு மேற்பட்ட ஊழியர்கள் நோயாளர்களாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால் 35 சிற்றூழியர்களே குறிக்கப்படும் வேலைகளை செய்கின்றனர். எனவே இங்கு உள்ள சிற்றூழியர்கள் பற்றாக்குறையை கருத்திற்கொண்டு உடன் சிற்றூழியர்கள் நியமிக்கப்படவேண்டும்.
இவ்வைத்தியசாலையில் காணப்படும் நோயாளர்களுக்கான இட நெருக்கடியை கவனத்தில் கொண்டு ஆண்கள், பெண்களுக்கான விடுதியும், மகப்பேற்று விடுதியும் அவசரமாக அபிவிருத்தி செய்யப்பட வேண்டும்.

பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் நீண்ட காலமாக நிலவுகின்ற வெற்;றிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். வைத்திய நிபுணர், வைத்தியர்கள், நிருவாக உத்தியோகத்தர், றுயசன ளளைவநச ​, தாதியர், 

மருந்தாளர், சிற்றூழியர் போன்ற வெற்றிடங்களை நிரப்புவதற்கான அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

காத்தாண்குடி ஆதார வைத்தியசாலையில் நிலவும் ஆளனிப்பற்றாக்குறையை நிபர்த்தி செய்யுமாறு கோரி காத்தான் குடி அனைத்துப் பள்ளிவாசல் சம்மேளனம் விழிப்புணர்வு 

ஆர்ப்பாட்டம் ஒன்றை நடாத்த ஏற்பாடுகள் செய்த வேளை கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி அவர்கள் சமரச ஏற்பாடுகளை மேற்கொண்டார். எனவே விரைவில் காத்தான்குடி ஆதார 

வைத்தியசாலையில் நிலவும் ஆளனிப்பற்றாக்குறையை நிரப்புவதற்கான அவசர நடவடிக்கைகளை சுகாதார அமைச்சர் மேற்கொள்ள வேண்டும் எனத் தெரவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog