Breaking

Sunday

சம்மாந்துறை விளையாட்டு கட்டிடத்தொகுதியில் ஹப்பி கிட்ஸ் சப்னா நிலையத்தின் 25 வது ஆண்டு நிகழ்வு....!


ஹப்பி கிட்ஸ் சப்னா பகல் பராமரிப்புு நிலையத்தின் 25 வது ஆண்டு நிகழ்வு வெகு விமர்சியாக சம்மாந்துறை விளையாட்டு கட்டிடத்தொகுதியில் இடம் பெற்றது. இந்நிலையத்தினை பொறுத்த மட்டில் 82 பிள்ளைகளையும் 7 ஆசிரியர்களையும் கொண்டு சிறந்த முறையில் பிள்ளைகளுக்கு அறிவுரை வளங்கி அவர்களது அடுத்த கட்ட நடவடிக்கைகளை சரியாக முன்னேற்றுவதுடன் சிறந்த 

ஆலோசனயாளர்களையும் கொண்டமைத்து சம்மாந்துறையில் ஒரு முன்னேற்றகரமாக இப் பகல் பராமரிப்பு நிலையம் விளங்குகிறது 
இன்று இந்நிகழ்வினை பொறுத்தமட்டில் சிறப்பித்து கூறவேண்டுமானால் இன்றைய காலாண்டு நிகழ்வு பூர்த்தியே இதன் முக்கிய விடயமாகும் . இன்றைய நிகழ்வில் பல பிஞ்சு மலர்கள் தங்களது திறமைகளை வெகு விமர்சியாக 

வெளிப்படுத்தினர். அவர்களது ஒவ்வெரு செயற்ப்பாடுகளும் அங்கு வந்த பார்வையாளர்களின் கவனத்தை வெகுமையாக ஈர்த்தது என்றால் மிகையாகாது 
இதனடிப்படையில் இந்நிகழ்வின் பிரதம அதிதிகள் வரிசையில் சம்மந்துறைக்கான கைத்தொழில் அதிகார சபையின் ஆலோசகராக செயற்ப்படும் M.M நௌஷாத் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர் 


இங்கு அவர் உரையாற்றுகையில் இங்கு வந்த எங்களுடைய பிஞ்சு மலர்கள் திறமைகளை சிறந்த முறையில் வெளிப்படுத்தினார்கள் அவர்களது ஒவ்வெரு செயற்ப்பாடுகளும் எங்களது கடந்தகால சிறு பராயத்தினை நினைவு கூறும் வகையில் அமைந்துள்ளது. இவர்கள் அனைவரும் எதிர்காலத்தில் வைத்தியர்களாகவோ, 

பொறியியலாளர்கலாகவோ ஏன் பலதுறைகளில் சாதனை புரியக்கூடியவர்களாகவோ மாறக்கூடியவர்களாக உள்ளனர் இவர்களது இத்தகைய செயற்ப்பாட்டுக்கு அத்திவாரமாக திகழ்வது இத்தகைய பகல் பராமரிப்பு நிலையம் தான் . எனவேதான் ஆரம்ப கல்வியிலும் பிள்ளைகளுக்கு சிறந்த நல்லொழுக்கம் கடை பிடித்துகொடுக்க வேண்டியது இன்றியமையாத ஒன்றாகும் 

அவர்களை இஸ்லாமிய ரீதியில் வழப்படுத்த் வேண்டும் காரணம் நாம் அனைவரும் ஒரு முடிவில்லா வாழ்க்கைக்கு பயணிக்க கூடியவர்கள் அங்கு எம்மிடம் அல்லாஹ்விடம் இருந்து கேட்க்கப்படும் வினாக்கள் ஒவ்வென்றுக்கும் நாம் பதில் கூற வேண்டியவர்களாக உள்ளோம் இதனடிப்படையில் எமக்கு தந்த வாழ்க்கையினை சிறாந்த முறையில் அமைத்து எம் 

குழந்தைகளுக்கு சிறந்த வழிகாட்டல்களை அமைப்பதினூடாக மறுமையில் நாங்கள் குறிப்பிட்ட பயனை அடையலாம். 
இந்த உலக செயற்ப்பாடினை பொறுத்தவரையில் அல்லாஹ்வுக்கு மனிதன் செய்யும் கடமைகள் , மனிதன் மனிதனுக்கு செய்யும் கடமைகள் , மனிதன் மனிதனல்லாத ஏனைய உயிரினங்களுக்கு செய்யும் கடமைகள், கணவன் மனைவிக்கு செய்யும் கடமைகள்,

 மனைவி கணவனுக்கு செய்யும் கடமைகள், பிள்ளைகள் பெற்றோருக்கு செய்யும் கடமைகள், பெற்றோர் பிள்ளைகளுக்கு செய்யும் கடமைகள். 
என வகுத்தமைக்கப்பட்டுள்ளது இத்தகைய கடமைகளை மனிதராகிய நாங்கள் அல்லாஹ்வும் , ரசூலும் காட்டித்தந்த பாதையில் செயற்ப்படுத்துவதன் ஊடாக குறிப்பிட்ட சுவனத்தினை அடையலாம்

இதில் பெற்றோர் பிள்ளைகளுக்கு செய்யும் கடமைகள். மிக முக்கியமானதாகும் காரணம் ஒரு பிள்ளையின் ஆரம்ப நிலையினை வகுத்தமைப்பது இப்பிள்ளை பருவம்தான் பெற்றோர்களின் சிறந்த வழிகாட்டல் இல்லாமல் இருந்தால் அந்த பிள்ளையின் வாழ்க்கை நரகம் தான் மேலும் அவர் கூறுகையில் இதனைப்பற்றி நபி ( ஸல்) அலை அவர்கள் கூறும் போது “ 

அனைத்து பிள்ளைகளும் இஸ்லாத்தில்தான் பிறக்கின்றது அவர்களை யூதர்களாக்குவதும் , நாசராக்களாகக்குவதும் அவர்களது பெற்றோர்கள்தான் “ இத்தகைய வசனமானது தனது பிள்ளைகளின் செயற்ப்பாடுகளில் பெற்றோரின் பங்களிப்பு பற்றி கூறுவதாகும் எனவே பெற்றோர்களாகிய நாங்கள் தமது 

பிள்ளைகளினை சிறந்த நன்னடத்தை உள்ளவர்களாக ஆக்குவது இன்றியன்மயாத ஒன்றாகும் , மேலும் தனது பெற்றோர்களை மற்றும் தமது உறவினர்களை விட்டு விட்டு ஆரம்ப பாடசாலைக்கு வரும் ஒவ்வெரு பிள்ளைகளுக்கும் இங்கு கடமையாற்றும் ஆசிரியர்கள் , மற்றும் பொறுப்பு வாய்ந்தவர்கள் அனைவரும் 

பெற்றோர்கள் தான் எனவே பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு செய்யும் கடமைகள் எதுவோ. அத்தகைய பணிகளை ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டும் என்று கூறி இத்தகைய பாரிய பணிகளை செய்து முடித்த ஆசிரியர்களுக்கும் , மற்றும் பொறுப்பு வாய்ந்தவர்களுக்கும் அல்லாஹ் ரஹ்மத் செய்ய வேண்டும் அத்துடன் இத்தகைய இளம் பிஞ்சுக்களின் எதிர்கால 


வாழ்க்கையினை முன்னேற்றகரமாக அமைக்க வல்ல அல்லாஹ் அருள் புரிவானாக 
என்று கூறி தமது உரையின் எதிர்காலத்தின் பெற்றோர்களின் செயற்ப்பாடுகள் மற்றும் ஆசிரியரின் செயற்ப்பாடுகளின் முக்கியத்துவம் மாற்றி விளக்கினார்
by-Mohamed Mufas

செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog