Breaking

Thursday

ஐ.நா சபையின் புதிய செயலாளர் நாயகமாக...


ஐக்கிய நாடுகள் சபையின் புதிய செயலாளர் நாயகமாக அந்தோனியோ குத்தரெஸ் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
இந்த சத்தியப் பிரமாண நிகழ்வு நேற்று முன்தினம் பொதுச் சபையின் தலைவர் பீற்றர் தொம்சன் முன்னிலையில் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் இடம்பெற்றது.

போர்த்துக்கல் நாட்டின் முன்னாள் பிரதம மந்திரி அந்தோனியோ குத்தரெஸ் ஐக்கிய நாடுகள் சபையின் ஒன்பதாவது செயலாளர் நாயகம் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியின் பதவியேற்பு, சிரியாவில் நிலவும் மனிதாபிமான நெருக்கடிகள் என்பன குத்தரெஸிற்கு பாரிய சவால்களாக இருக்கமென்று அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
 by-news.lk
செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog