Breaking

Wednesday

சம்மாந்துறையில் சட்டவிரோத மின்சாரம் பெற்ற குற்றச்சாட்டில் கைது....!


எம்.எஸ்.எம்.ஹனீபா

நிந்தவூர் மற்றும் சம்மாந்துறைப் பிரதேசங்களில்  வீடுகளுக்கு சட்டவிரோதமாக  மின்சாரம் பெற்ற குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட 03 பேரை தலா ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான சரீரப்பிணைகளில் சம்மாந்துறை நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் ஏ.எல்.அறூஸ், நேற்று (20) விடுவித்துள்ளார். 

இலங்கை மின்சாரசபையின் தலைமைக் காரியாலய புலனாய்வுப் பிரிவினரும்  பொலிஸாரும் இணைந்து மேற்படி பிரதேசங்களில் திங்க்கட்கிழமை (19) சோதனை மேற்கொண்டனர். இதன்போதே, இம்மூவரின் வீடுகளுக்கும் சட்டவிரோதமாக மின்சாரம் பெற்றுவந்தமை தெரியவந்தது. மேலும், இது தொடர்பான வழக்கு விசாரணை எதிர்வரும் ஜனவரி; 25ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.   
செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog