Breaking

Wednesday

பிரதமர் தலைமையில் இன்று மூவாயிரம் குடும்பங்களுக்கு உறுதிகள்...


கொழும்பு மாவட்டத்தில் தொடர்மாடி வீடுகளில் வாழும் மூவாயிரம் குடும்பங்களுக்கு உறுதிகள் வழங்கப்படவுள்ளது.
கொழும்பு சுகததாஸ உள்ளக அரங்கில் பிரதமர் ரணில்விக்கிரமசிங்க தலைமையில் இன்று உறுதிகள் வழங்கப்படவுள்ளது.

கொழும்பு மாவட்டத்தில் குடியிருக்கும் தொடர்மாடி வீடுகளுக்கான உறுதிகள் எதிர்வரும் இரண்டு வருடங்களுக்கும் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளபடுவதாக தேசிய வீடு அபிவிருத்தி அதிகார சபையின் பிரதி பொது முகாமையாளர் ஏ.கே.புஷ்பா ரோகினி தெரிவித்துள்ளார்.


தொடர்மாடி வீடுகளில் வாழும் சுமார் ஏழாயிரம் குடும்பங்களுக்கு தற்பொழுது வீட்டு உறுதிகள் வழங்கப்பட்டுள்ளதாக பிரதி பொது முகாமையாளர் குறிப்பிட்டார்.


வீடுகளற்ற அனைவருக்கும் அடுத்து வரும் மூன்று வருடங்களில் வீடொன்றை பெற்றுக்கொடுப்பது அரசாங்கத்தின் இலக்காகும் என்று அவர் தெரிவித்தார்.

பொதுமக்களுக்கு வீடுகளை நிர்மாணித்துக் கொடுப்பதற்கான பாரிய திட்டமொன்றை தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை கொண்டிருப்பதாக அதிகார சபையின் சொத்துக்களுக்கான பொது முகாமைத்துவ பிரதி பொது முகாமையாளர்று.யு.னு.சரத்குமார தெரிவித்தார்.
by-news.lk
செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog