Breaking

Monday

முஸ்லிம் சமூகம் நசுக்கப்பட்ட போதெல்லாம் முஸ்லிம்கள் பொறுமை காத்து சமத்துவம்இ சகோதரத்துவம் நிலை பெறுவதற்கு முன்மாதிரியாக செயற்பட்டுள்ளனர்.



(எம்.ஜே.எம்.சஜீத்)

நமது நாட்டின் வரலாற்றை நாம் பின்னோக்கிப் பார்க்கும் போது முஸ்லிம்
சமூகம் பேரினவாதிகளால் நசுக்கப்பட்ட வேளையிலும்இ தமிழ் மக்களின்
ஆயுதப்போராட்டம் முஸ்லிம் சமூகத்தை நோக்கி திருப்பபட்ட வேளையிலும்
முஸ்லிம் சமூகம் உயிர்இ உடமைகள் என பல்வேறு வழிகளிலும் பாதிக்கப்பட்டனர்.
அவ்வாறான சூழ்நிலையிலும் முஸ்லிம்கள்; பொறுமை காத்து நமது நாட்டின்
சமத்துவம்இ சகோதரத்துவம் நிலை பெறுவதற்கு அர்ப்பணிப்புடன் முன்மாதிரியாக
செயற்பட்டனர் என கிழக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவரும்இ அம்பாறை மாவட்ட
ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவருமான எம்.எஸ்.உதுமாலெப்பை
தெரிவித்தார்.

ஒலுவில் பிரதேசத்தில் இடம்பெற்ற இளைஞர்கள் அமைப்பின் விசேட ஒன்றுகூடல்
நிகழ்வில் நேற்று (11) விசேட அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றிய போதே
அவர் மேற்கன்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில் முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான இனவாதச்
செயற்பாடுகள் தொடர்ந்த போதிலும் முஸ்லிம் சமூகம் அமைதியாக இருந்து பொறுமை
காப்பதை சில இனவாதிகள் நமது சமூகத்தின் பலயீனம் என தவறாக எண்ணுகின்றனர்.

நமது நாட்டில் வாழும் முஸ்லிம் மக்களின் 1ஃ3 பங்கினர் மாத்திரம் வட –
கிழக்கு மாகாணங்களில் செறிந்து வாழுகின்றனர். 2ஃ3 பங்கினர் நாட்டின் ஏனைய
மாகாணங்களில் சிங்கள மக்கள் மத்தியிலும்இ மலையக மக்கள் மத்தியிலும்
சிறுபான்மையினராக வாழ்ந்து வருகின்றனர். எப்போதும் முஸ்லிம்கள் நமது
நாட்டில் வாழும் சிங்கள மக்களுடனும்இ தமிழ் மக்களுடனும் சிநேகபூர்வமான
முறையில் வாழ்ந்து வருகின்றனர்.

எப்படியாவது இலங்கையில் சிங்கள – முஸ்லிம் சமூகங்களுக்கிடையில் இன மோதல்
ஒன்றை ஏற்படுத்த சில இனவாத சக்திகள் செயல்படுகின்றனர். இவ்வேளையில்
முஸ்லிம் இளைஞர்கள் மிகவும் பொறுமையுடன் செயல்பட வேண்டும். முஸ்லிம்
சமூகம் நமது நாட்டின் இறைமைக்கும்இ ஐக்கியத்திற்கும்இ சமாதானத்திற்கும்
அளப்பரிய பங்கினை வகித்துள்ளது.

இருந்த போதிலும் அவைகளை எல்லாம் மறந்து சில இனவாதிகள் பகிரங்கமாகவே நமது
சமூகத்திற்கு எதிராக செயல்பட்டு வருகின்றன. இனவாதச் செயற்பாடுகளில்
ஈடுபட்டு நமது நாட்டில் இனவாதத்தை ஏற்படுத்துவர்கள் யாராக இருந்தாலும்
சமமான முறையில் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

அளுத்கமஇ பேருவல நகரங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக செயற்பட்ட ஞானசார
தேரருக்கு எதிராக சுமார் 40 முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக
தெரிவிக்கப்படுகின்றது. இவருக்கு எதிராக நடவடிக்கைகளை கடந்த அரசாங்கம்
மேற்கொள்ளவில்லை என்பதற்காகவே நமது நாட்டில் ஆட்சி மாற்றம்  ஏற்படுவதற்கு
முஸ்லிம்இ தமிழ் மக்கள்; பாரிய பங்களிப்புக்களைச் செய்தனர். ஆனால்
சிறுபான்மை சமூகங்களுக்கு எதிராக பல அட்டூழியங்களை அரங்கேற்றிய ஞானசார
தேரருக்கு எதிராக இந்த நல்லாட்சியிலும் எந்த நடவடிக்கைகளும்
மேற்கொள்ளப்படவில்லை.

முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக இடம்பெற்ற சம்பவங்களை கன்டித்து உணர்ச்சி
வசப்பட்டு பேசியமைக்காக சிறிலங்கா தௌஹீத் ஜமாத்தின் பொதுச் செயலாளர்
அப்துல் றாசிக் கைது செய்யப்பட்டார். ஆனால் அளுத்கம நிகழ்வின்
சூத்திரதாரியான ஞானசார தேரர் இதுவரை கைது செய்யப்படாமலும்இ விசாரனை
செய்யப்படாமலும் உள்ளார். எனவேஇ இனவாதச் செயற்பாடுகளில் ஈடுபடும்
சகலருக்கும் சட்டம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

குறிப்பாக இனப்பிரச்சினைக்கான தீர்வுஇ சட்ட வரைவு பாராளுமன்றத்தில்
சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில் இதுவரை இத்தீர்வு
திட்டத்தில் என்ன விடயம் உள்வாங்கப்பட்டுள்ளது என்பதனை அறிந்து கொள்ள
முடியாத நிலையில் முஸ்லிம் சமூகம் உள்ளது.

நாளைய சமூகத்தின் தலைவர்களாகிய இளைஞர்கள்; 
நமது சமூகத்தின் சமகால அரசியல்
நிலமை தொடர்பாக தெளிவான தெளிவுகளைப் பெற்றுக் கொண்டு பல்லின மக்கள்
வாழும் நமது நாட்டில் இனங்களுக்கிடையில் புரிந்துணர்வையும்இ
ஐக்கியத்தையும் ஏற்படுத்தக் கூடிய வகையில் இளைஞர்களின் செயற்பாடுகள் அமைய
வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog