Breaking

Saturday

முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் உட்கட்சிப் பூசல் இணக்கப்பாட்டுடன் முடிவு...!


முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்குள் இதுவரை காலமும் நிலவி வந்த உட்கட்சிப் பூசல் நேற்றைய தினம் இணக்கப்பாட்டுடன் முடிவடைந்துள்ளது.

கடந்த பொதுத் தேர்தலின் பின்னர் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் ஹசனலி கட்சி நடவடிக்கைகளில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டிருந்தார். அத்துடன் அவருக்கு வாக்களிக்கப்பட்டிருந்ததன் பிரகாரம் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படாமை காரணமாக கட்சிக்குள் ஒரு அதிருப்தி மேலெழுந்திருந்தது.

இதற்கிடையே கட்சியின் பேராளர் மாநாடு கூட்டப்பட்டு புதிய பொதுச் செயலாளர் ஒருவரும் தெரிவு செய்யப்பட்டிருந்த நிலையில், ஹஸனலியும் கட்சிக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தொடங்கியிருந்தார்.

இதன் காரணமாக கட்சி இரண்டாக பிளவுபடும் நிலை ஏற்பட்டிருந்ததுடன், செயலாளர் பதவியில் பிரச்சினை காரணமாக முஸ்லிம் காங்கிரஸ் கட்சி எதிர்வரும் தேர்தல்களில் போட்டியிட முடியாத நிலையும் ஏற்பட்டிருந்தது.

இந்நிலையில் நேற்று காலை முதல் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் மற்றும் முன்னாள் பொதுச் செயலாளர் ஹசனலி ஆகியோருக்கிடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் மூலம் கட்சிக்குள் நிலவிய உட்பூசல் முடிவுக்கு வந்துள்ளது.

அத்துடன் தற்போதைக்கு சட்டத்தரணி சல்மான் வகிக்கும் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ஹசனலிக்குப் பெற்றுக் கொடுப்பதற்கும் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog