Breaking

Friday

மக்கா சென்று திரும்பிய கொழும்பு ஜோடி 2.6 மில்லியன் ருபா தங்கம் கொண்டுவந்து பிடிபட்டனா்.


(அஷ்ரப் ஏ சமத்)

உம்ரா கடமைக்காக மக்கா நகா் சென்று நேற்று (22)  ஜித்தாவிலிருந்து சவுதி ஏயா விமானம் ஊடக கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த கொழும்பைச் சோ்ந்த கனவன் மனைவி இருவரே  2.6 மில்லியன் ருபா பெறுமதியான தங்க நகைகள் மற்றும் தங்க பிஸ்கட்டுக்களுடன் சுங்க அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டனா். 

இவா்கள்   தமது பொதிக்குள் சூழ்ச்சியமான முறையில் தங்க நகைகளை மறைத்து கொண்டு வந்ததையடுத்து சுங்க திணைக்கள அதிகாரிகளினால் பரிசோதனை செய்து மறைத்து வைத்துக் கொண்டுவரப்பட்ட தங்க நகைகள் 

கண்டுபிடிக்கப்பட்டன.   இவ் தம்பதியினர்  கைது செய்யப்பட்டு  நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டனா் என சுங்கத் திணைக்கள பணிப்பாளா் பராக்கிரம பஸ்நாயக்க தெரிவித்தாா்.    
செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog