Breaking

Tuesday

எதிர்க்கட்சித்தலைவரின் கிழக்கு மாகாண வரவு செலவுதிட்ட உரை.


(எம்.ஜே.எம் சஜீத்)




இனப் பிரச்சினை தொடர்பாக கிழக்கு மாகாண சபை மக்களின் உணர்வுகளை கிழக்கு மாகாண சபை முன்வைக்காது வரலாற்றுத் தவறினை செய்துள்ளதாக கிழக்கு மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் எம்.எஸ். உதுமாலெப்பை தெரிவித்தார்.


கிழக்கு மாகாண சபை அமர்வு இன்று (20) தவிசாளர் சந்திரதாச கலபெதி தலைமையில் நடைபெற்ற போது 2017ஆம் ஆண்டிக்கான வரவு செலவுத்திட்ட விவாதத்தினை எதிர்க்கட்சி சார்பில் ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்இ  இனப்பிரச்சினைக்கான தீர்வுதிட்டத்திற்கு தமிழ்; சமூகத்தின் சார்பாக வட மாகாண சபையில் யோசனையினை நிறைவேற்றி உள்ள சந்தர்ப்பத்தில் நமது இனப் பிரச்சினைக்கு ஒட்டுமொத்தமான தீர்வுக்கும், தீர்மானத்திற்குமான காலம் நெருங்கி வருகின்ற இவ்வேளையில் கிழக்கு மாகாணத்தில் வாழும் தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களின் 


தீர்வாக ஒரு தீர்வு திட்ட யோசனை சமர்ப்பிக்குமாறு கோரி என்னால் இச்சபையில் கொண்டு வரப்பட்ட பிரேரணையை கிழக்கு மாகாண சபையால் நிறைவேற்ற முடியாத ஒரு வரலாற்று தவறினால் கிழக்கு மாகாண மக்களின் உண்மையான உணர்வுகளுக்கு கிழக்கு மாகாண சபை சந்தர்ப்பம் வழங்கவில்லை என்பதனை கவலையுடன்; தெரிவித்துக் கொள்கின்றேன்.


குறிப்பாக கிழக்கு மாகாண சபைக்கு 2017ஆம் வருடத்தில் குறைந்தளவிலான நிதிகளே ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே மத்திய அரசாங்கத்திடமிருந்து போரினால் பாதிக்கப்பட்ட நமது கிழக்கு மாகாண சபைக்கு அதிகமான நிதிகளைப் பெறுவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள நாம் வேண்டும். 13வது அரசியலமைப்பு திருத்தச் சட்ட மூலத்தினால் ஏற்படுத்தப்பட்ட மாகாண சபை முறையை இன்று மக்களுடன் பிண்ணிப்பிணைந்துள்ள நிலையில் மாகாண சபைகளின் அபிவிருத்திற்கான நிதிகள் குறைக்கப்பட்டுள்ளது குறித்து கவலையடைய வேண்டியுள்ளது.


மாகாண சபைகளுக்கான நிதிகளை குறைத்துவிட்டு மத்திய அரசாங்க நிதி அமைச்சர் மாகாண சபைகளுக்கு அதிகமான நிதிகளை வழங்குவதால் மாகாண சபை அமைச்சர்களும், உறுப்பினர்களும், அதிகாரிகளும் வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டு வீண் செலவுகளை செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாண சபையின் நிதியினைப் பெற்று நமது மாகாண அமைச்சர்கள், உறுப்பினர்கள், அதிகாரிகள் எவ்விதமான வெளிநாட்டு பயணங்களையும் மேற்கொண்டு வீண் செலவுகளை செய்யவில்லை என நான் நினைக்கின்றேன். மாகாண சபைகளுக்கான நிதிகளை குறைத்து விட்டு மாகாண சபைகளின் நடவடிக்கைகளை மலினப் படுத்தும் நடவடிக்கைகளாகவே நாம் இதனைப் பார்க்க வேண்டியுள்ளது.


தொடர்ச்சியாகவும் நாம் மத்திய அரசாங்கத்தின் உதவியில் செயற்பட வேண்டியுள்ளது. கிழக்கு மாகாண சபை நமது மாகாணத்தில் உள்ள வளங்களை அபிவிருத்தி செய்து நமது மாகாண வருமானத்தை பெறக்கூடிய வழிவகைகளைச் செய்ய வேண்டும்.


வரவு செலவுத் திட்டம் என்பது கிழக்கு மாகாண சபையின் நிதி சார்ந்த நடவடிக்கை மாத்திரமின்றி நமது கிழக்கு மாகாண பொருளாதார – வாழ்வாதார நடவடிக்கைகளில் பாரிய பங்கினை வழங்கி வருகின்றன. கிழக்கு மாகாண சபையின் 2017ஆம் ஆண்டுக்குரிய வரவு – செலவு திட்டத்தின் ஊடாக கிழக்கு மாகாணத்தில் யுத்தத்தினாலும், இயற்கை அனர்த்தத்தினாலும் பாதிப்படைந்த மக்களினதும் வறுமையினால் பாதிக்கப்பட்ட மக்களினதும் பொருளாதார வாழ்வாதார நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும.


கிழக்கு மாகாணம் தனி ஒரு இனத்தையோ, மாவட்டத்தையோ தன்னகத்தே கொண்ட ஒரு மாகாணம் அல்ல. மூன்று மாவட்டங்களையும், தமிழ், முஸ்லிம், சிங்களவர் என மூவின மக்களும் கலந்து வாழும் மாகாணமாகும். கிழக்கு மாகாண சபையின் அமைச்சுக்களின் ஊடாக ஒதுக்கப்படும் நிதிகளின் போதும், விசேட அபிவிருத்தி திட்டங்களின் போதும் இன விகிதாசாரம், வறுமை மாவட்டம் என்பதனை கருத்தில் கொண்டு நிதிப்பங்கீடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். சமூகங்களுக்கிடையிலான விரிசல்களை தவிர்த்து நல்லாட்சியை நிலைநிறுத்துவதற்கு முதற்கட்டமாக அபிவிருத்தி நிதி ஒதுக்கீடுகளையும் அரச துறை சேவை வசதிகள் மற்றும் வேலை வாய்ப்புகளையும் சகல சமூகங்களிடையேயும் உள்ளுர் பிரதேசங்களிடையேயும் சமமான வகையிலும் நீதியான முறையிலும் பகிரப்பட வேண்டியது கட்டாயமானதாகும்.


குறிப்பாக அபிவிருத்தி நன்மைகள் யாவருக்கும் சமமாக சென்றடையும் வகையில் அபிவிருத்தி திட்ட தெரிவுகளும் நிதி ஒதுக்கீடுகளும் பிரதேச, சமூக பகிர்வுகளில் சமத்துவம் என்பதனை உறுதி செய்வதாக அமைய வேண்டும். இவ்வாறு செய்யாதுவிடின் சமூக மட்டத்தில் முரண்பாடுகளைத் தோற்றுவிக்கும். இவற்றில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக் கூறும் கடப்பாடு என்பன உறுதி செய்யப்படுவதுடன் அபிவிருத்தி திட்டங்களில் சமநிலை பேணப்பட வேண்டும்;.


யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட கிழக்கு மாகாண மக்களின் மனங்களை வெற்றி கொள்வதற்கான வேலைத்திட்டங்களை கிழக்கு மாகாண சபை மேற்கொள்ள வேண்டும். மாகாண சபைகளுக்கு உச்ச அதிகாரம் கோரி நிற்கும் வேளையில் ஏற்கனவே மாகாண சபையிடம் இருந்த நிதி பெறும் அதிகாரம் சென்ற வருடம் மத்திய அரசாங்கத்தினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட வரவு – செலவு திட்ட யோசனைக்குப் பின் மத்திய அரசாங்க உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சினால் பறித்தெடுக்கப்பட்டது. இது தொடர்பாக முதலமைச்சர்கள் ஜனாதிபதியிடம் முறையிட்டார்கள். இந்த நிதி அதிகாரத்தை மீண்டும் மாகாண சபைக்கு வழங்கப்படுவதாக வாக்குறுதிகள் வழங்கப்பட்டன. தற்போது நம்மிடம் இருந்த நிதி அதிகாரம் மீண்டும் கிடைத்துள்ளதா? என்பதனை முதலமைச்சர் இச்சபைக்கு தெரிவிக்க வேண்டும்.


பிச்சை வேண்டாம் நாயைப் பிடி என்ற நிலமையில் நாம் இன்றுள்ளோம் மாகாண சபைக்கு உச்ச அதிகாரம் வழங்க வேண்டும் என நாம் குரல் கொடுத்து வரும் இந்த சூழ்நிலையில் இருந்த அதிகாரத்தையும் மத்திய அரசிடம் தாரைவார்த்துள்ளோம். அரசியலமைப்பு சபையால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பில் திருத்தங்களை கொண்டுவருவதற்கான பரிந்துரைகளை மேற்கொள்ளும் வகையில் ஆறு உப – குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.


தேசிய மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு, பொது ஒழுங்கு, பொலிஸ் சட்ட வலு
செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog