Breaking

Friday

கிழக்கு மாகாணத்தில் திட்டமிட்டு ஆக்கிரமிக்கப்பட்ட சிறுபான்மை மக்களுக்குச் சொந்தமான பாரம்பரிய காணி...



எம்.ஜே.எம்.சஜீத்

கிழக்கு மாகாணத்தில் திட்டமிட்டு ஆக்கிரமிக்கப்பட்ட சிறுபான்மை மக்களுக்குச் சொந்தமான பாரம்பரிய காணிகளை மீட்பதற்கான விசேட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

எதிர்க்கட்சித் தலைவர் எம்.எஸ்.உதுமாலெப்பை

மாகாண சபைகளுக்கு காணி, பொலிஸ் அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கும் நாம் கிழக்கு மாகாண காணி அமைச்சின் அதிகாரங்களை பாவித்து கிழக்கு மாகாணத்தில் திட்டமிட்டு ஆக்கிரமிக்கப்பட்ட சிறுபான்மை மக்களுக்குச்

சொந்தமான பாரம்பரிய காணிகளை மீட்டுக் கொடுப்பதற்கான விசேட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, காணி அபிவிருத்தி அமைச்சின் விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய கிழக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தார்.

தொடர்ந்தும் உரையாற்றுகையில்.....

கிழக்கு மாகாணத்தில் இனங்களுக்கிடையில் ஐக்கியத்தையும், தேசிய நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துவதற்கு சிறுபான்மை மக்களின் காணிகளை ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட சம்பவங்கள் தடையாகவுள்ளது. கிழக்கு மாகாண காணி அமைச்சராக பதவி புரிந்த முன்னாள் கல்வி அமைச்சர் விமல வீர திஸாநயக்க

பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர் என்றாலும் நமது கிழக்கு மாகாணத்தின் கல்வி, காணி விடயங்களில் முடிந்தளவு அர்ப்பணிப்போடு செயல்பட்டார் என்பதனை நமது கிழக்கு மாகாண மக்கள் என்றும் நினைவு கூறுவர். எனவே, கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் கிழக்கின் தலை நகரான

திருகோணமலையைச் சேர்ந்தவர். காணி அமைச்சின் ஊடாக கிழக்கு மாகாணத்தில் வாழும் சிறுபான்மை மக்களுக்குச் சொந்தமான ஆக்கிரமிக்கப்பட்ட காணிகளை மீட்டுக் கொடுப்பதற்கு உண்மைக்குண்மையாக உள்ளத்தால் எண்ணி

செயல்பட்டு ஜனாதிபதி, பிரதம மந்திரியிடம் விசேட வேண்டுகோள் விடுத்து இப்பிரச்சினைகளுக்கு அவசரத்தீர்வுகள் பெற்றுக் கொடுக்க முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். அப்போதுதான் இன்று காணி அமைச்சின் விவாதத்தில் கலந்து கொண்டு

உரையாற்றிய கிழக்கு மாகாண சபையின் மக்கள் பிரதிநிதிகளின் உண்மையான உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் நிலமை உருவாகும். கிழக்கு மாகாண மக்களின் ஆணையைப் பெற்ற நமது கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களின் கோரிக்கைகள்

நிறைவேற்றப்படும் போது இன்று காணி அமைச்சினை விமர்சனம் செய்த நமது உறுப்பினர்கள் உங்களை வாழ்த்துவார்கள்.


அம்பாறை மாவட்டத்தில் பொத்துவில் பிரதேசத்தில் சிறுபான்மை மக்களுக்குச் சொந்தமான பாரம்பரிய காணிகளுக்கு நல்லாட்சி அரசில்; கூட இன்னும் அனுமதி வழங்கப்படாத சூழ்நிலை தொடர்கிறது. இந்த விடயத்தில் விசேட கவனம் செலுத்த வேண்டும்.

கிழக்கு மாகாண சபையின் இறுதிக் காலத்தில் உள்ள நாம் இப்பிரச்சினைகளுக்கு தீர்வுகளை காண வேண்டும் இல்லையெனில் அடுத்த முறை நடைபெறவுள்ள கிழக்கு மாகாண சபை தேர்தலில் தெரிவு செய்யப்படும் முதலமைச்சருக்கும்,

அமைச்சரவைக்கும், மக்கள் பிரதிநிதிகளுக்கும் இப்பிரச்சினைக்கு தீர்வு காண விட்டுவிடாமல் அவசர நடவடிக்கைகளை மேற்கொண்டு தீர்வுகளை காணுங்கள்.

உண்மையில் கிழக்கு மாகாண காணி ஆணையாளர், உதவி ஆணையாளர் மூவின மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து செயல்படுபவர்கள் இவ்வாரான நல்ல எண்ணங்கள் உள்ள அதிகாரிகள் இருக்கும் வேளையில் நமது கிழக்கு மகாண

காணிப்பிரச்சினைகளுக்கு தீர்வுகளைப் பெற்று நமது கிழக்கு மாகாண இனங்களுக்கிடையில் ஐக்கியத்தையும், ஒற்றுமையையும் ஏற்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்தார்.

செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog