Breaking

Saturday

சசிகலாவுக்குக் கிடைத்திருக்கும் முதல் அங்கீகாரம்...


கச்சத்தீவு தேவாலய திறப்பு விழாவுக்கு 100 தமிழக மீனவர்கள் பங்கேற்க அனுமதி அளித்திருப்பதுதான், அரசியல் வாழ்க்கையில் சசிகலாவுக்குக் கிடைத்திருக்கும் முதல் அங்கீகாரம் என்று கருதப்படுவதாக இந்திய ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
சசிகலா மறைந்த முன்னால் தமிழக முதலமைச்சர்ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியும் தமிழக அரசியலில் கால் பதிக்க முயன்றுகொண்டிருக்கும் முக்கிய பெண் அரசியல்வாதி என்பதும்
குறிப்பிடத்தக்கது.

கச்சத்தீவில் கட்டப்பட்டுள்ள தேவாலயம் திறப்பு விழாவில் பங்கேற்க 100 தமிழக மீனவர்களை அனுமதித்திருப்பது குறித்து இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறீசேனா எழுதிய கடிதம், இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கும், அதன் நகல், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவுக்கும் அனுப்பி வைக்கப்படடுள்ளது.

இதற்கு முன், கச்சத்தீவு தேவாலய திறப்பு விழாவில் 20 தமிழர்கள் மட்டுமே பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

ஜெயலலிதாவின் மறைவை அடுத்து, இரங்கல் தெரிவிக்க இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஆறுமுகம் தொண்டமான், டிசம்பர் மாதம் 7ம் தேதி சென்னை வந்தார். அப்போது, சசிகலாவை சந்தித்து ஆறுதல் கூறிய ஆறுமுகம் தொண்டமானிடம், கச்சத் தீவு தேவாலயத் திறப்பு விழாவில், 100 தமிழக மீனவர்களையாவது அனுமதிக்க வேண்டும் என்றும், தனது கோரிக்கையை இலங்கை ஜனாதிபதி எடுத்துரைக்க வேண்டும் என்றும் சசிகலா கேட்டுக் கொண்டார்.

சசிகலாவின் கோரிக்கையை, ஆறுமுகம் தொண்டமான், இலங்கை ஜனாதிபதியிடம் எடுத்துரைத்து, 100 தமிழக மீனவர்களுக்கு அனுமதியும் பெற்றுள்ளார்.

இது தொடர்பாக இந்திய ஜனாதிபதிக்கும் சசிகலாவுக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இந்த கடிதம், தமிழக தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்திடம் வழங்கப்பட்டது. அதில், பெறுநர் முகவரியில், திருமதி சசிகலா, போயஸ் கார்டன், சென்னை - 68 என்று எழுதப்பட்டிருந்தது. அந்த கடிதத்தை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் சசிகலாவிடம் ஒப்படைத்துவிட்டார்.

இந்த கடிதமே, சசிகலாவின் அரசியல் வாழ்க்கைக்கு, சர்வதேச அளவில் கிடைத்திருக்கும் முதல் அங்கீகாரமாக கருதப்படுவதாக இந்திய ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது

இது தொடர்பான செய்திகள் சமூக தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது என்றாலும், இரங்கல் தெரிவிக்க வந்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரிடம், தமிழக பிரசசினையை எடுத்துரைத்து தமிழக மீனவர்களுக்கு நலம் புரிந்ததாக, அதிமுக நிர்வாகிகள் புளங்காகிதம் அடைந்துள்ளனர் என்றும் இந்திய ஊடகம் குறிப்பி;ட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog