Breaking

Wednesday

நல்லிணக்கச் செயற்பாடுகளைக் குழப்புவதற்குச் சிலர் முயற்சி! – சம்பந்தன் குற்றச்சாட்டு...


நாட்டில் தற்போது நல்லிணக்க செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் அதனை குழப்புவதற்கு சிலர் முயற்சிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். 

திருகோணமலை, சம்பூர் – நாவலடி பிரதான வீதி இன்று மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றிய போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்குறித்தவாறு தெரிவித்துள்ளார்.

நாட்டில் இதுவரை காலமும் எந்தவொரு அரசியல் சாசனமும் மக்களது சம்மதத்துடன் நிறைவேற்றப்பட்டிருக்கவில்லை. தற்போதைய அரசாங்கத்தால் கொண்டு வருவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள அரசியல் சாசனமானது நாட்டின் சகல மக்களதும் அங்கீகாரத்துடன் கொண்டு வரப்பட வேண்டும். 

நாட்டில் தற்போது நல்லிணக்க செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் அதனை குழப்புவதற்கு சிலர் முயற்சிக்கின்றனர். அவற்றை தவிர்த்து செயற்பட வேண்டியது அவசியம். இந் நாட்டில் வாழும் சகல மக்கள் மத்தியிலும் நல்லிணக்கமும் புரிந்துணர்வும் ஏற்பட்டிருப்பதனை அவதானிக்கக்கூடியதாக உள்ளது. 

பிரச்சினைகள் ஏற்படாமல் இருப்பதற்கு அனைவரும் புரிந்துணர்வுடன் செயற்பட வேண்டுமெனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog