Breaking

Friday

சம்மாந்துறையில் பல கோடி ரூபா செலவில் 7 பிரதான பாலங்கள்...! படங்கள் இணைப்பு.


சம்மாந்துறையை பொறுத்த மட்டில் பொருளாதாரத்தில் பெரும் பங்கு வகிப்பது விவசாயமே.. இருந்த போதிலும் தமது விவசாய நடவடிக்கைகளுக்கு இன்றியமையாத தேவையாக இருந்த இந்த பாலங்கள் நீண்ட காலமாக இருந்து வந்தபோதும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை.

தொன்றுதொட்டு விவசாயம் செய்துவரும் இப்பிரதேச மக்கள் தங்களது வயலுக்குச் செல்லும் வளியிலுள்ள ஆறுகளைக் கடக்க பாலம் இல்லாமையால் சொல்லொணாத் துயரங்களுக்கு மத்தியிலேயே தங்களது விவசாயத்தை இதுவரை மேற்கொண்டு வருகின்றனர்.தங்களது விளை நெல்லை வீடு சேர்க்க விவசாயிகள் பட்டுவரும் கஷ்டத்தை நீக்குவதற்காக அவர்கள் இதுவரை எடுத்த அனைத்து முயற்சிகளும் தோல்வியிலேயே 

முடிவடைந்திருக்கிறது.அதேபோன்று மலையடிக்கிராம்ம் -4 இல் அமைந்துள்ள அஷ் சமா வித்தியாலயத்தை,சென்னெல் கிராமத்தோடு இணைக்க, பிரதான பண்ட் வாய்க்காலிற்கு குறுக்காக தேவைப்பட்ட பாலமும் இல்லாமையால் அப்பிரதேச மக்களும், மாணவர்களும் பல்வேறு கஷ்டங்களை அனுபவித்து 

வந்திருக்கின்றனர்.இவைகளை சரியாக புரிந்துகொண்ட,ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் சம்மாந்துறை தொகுதி அமைப்பாளரும், திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுத் தலைவருமான எம்.ஐ.எம்.மன்சூர் அவர்களின் துரித முயற்சியின் 

பயனாக,நீர்ப்பாசன திணைக்களத்தின் முழுமையான நிதியின் மூலம் அமைப்பதற்கான ஏற்பாடுகள் இல்லாத போதும் தமது பெரும் முயட்சியின் விளைவாக விசேட நிதி ஏற்பாட்டின் மூலம் கீழ் வரும் 7 பிரதேசங்களுக்குமான பாலங்கள் அமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது..

1 .மோராவில் பிரதேசத்தில் உள்ள உடையாண்ட கட்டு ஆற்றுக்கு குறுக்காக உள்ள பாலம்

2 . மோராவில் ஆற்றின் கள்ளியம்பத்தை இறக்கத்தில் ஒரு பாலம் 

3 .உடங்கா ஆற்றுக்கு குறுக்காக முஷ்டாக் அலி இறக்கத்தில் ஒரு பாலம்

4 .செங்கப்படை ஆற்றின் வம்மியடி வீதிக்குரிய பாலம் 

5 .பட்டம்பிட்டி ஆற்றில் மல்கம்பிட்டி அணைக்கட்டும் அருகில் ஒரு பாலம்

6 .உடங்கா ஆற்றின் மாவடி இறக்கத்தில் ஒரு பாலம்,

7 .மலையடி கிராமம் 4 இல் அமைந்துள்ள அல் சமா வித்தியாலயத்துக்கு எதிராக S வாய்க்காலுக்கு குறுக்காக ஒரு பாலம்.

இப்பாலங்களை அமைப்பதற்கான கள விஜயமும் , இப்பாலங்கள் அமைப்பதற்கான வடிவமைப்பு மற்றும் திட்ட வரைபு தொடர்பிலான கலந்துரையாடலும் சம்மாந்துறை பிராந்திய நீர்ப்பாசன பொறியியலாளர் MS.றிப்னாஸ் அவர்களின் 

தலைமையில் பாராளுமன்ற உறுப்பினரின் பங்குபற்றுதலுடன் கொழும்பில் இருந்து வருகை தந்த நீர்ப்பாசன திணைக்கள பொறியியலாளர்கள்,தொழில் நுட்ப உத்தியோகள் உள்ளடங்கலாக இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

ஏழைகளின் தோளன் என வர்ணிக்கப்படும்,பாராளுமன்ற உறுப்பினர் மன்சூர் அவர்களின் முயற்சி நிறைவேற பிராத்திப்போம்.






செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog