Breaking

Monday

வடகிழக்கு இணைக்கப்பட்டால் முஸ்லிம்களுக்குத் தனியலகு என்பது ஒரு சாத்தியமற்ற போலி நாடகமாகும்.


வடகிழக்கு இணைக்கப்பட்டால் முஸ்லிம்களுக்குத் தனியலகு என்பது ஒரு சாத்தியமற்ற போலி நாடகமாகும். ஹக்கீமின் இந்த ஏமாற்று பசப்பு வார்த்ததைகளுக்குக் கிழக்குவாழ் எந்த முஸ்லிமும் ஏமாந்து விடக்கூடாது.

ஏனெனில் தமிழ் தரப்புக்கள் தனியலகுக்கு விரும்பியிருந்தால் முஸ்லிம்களுடன் பேச்சை எப்போ ஆரம்பித்திருப்பார்கள். எதிர்வரும் 30ம் திகதி விவாதித்து வாக்களிப்புக்காகத் திகதி குறிப்பிடப்பட்டிருக்கும் நிலையில் தனியலகு பற்றிய எந்த முஸ்தீபுகளுமில்லாமல் வெறுமனே சும்மா இருந்துவிட்டு இறுதியில் வாக்களித்துவிட்டு மடுவெண்டு தெரிந்துதான் காலை வைத்தேன் என்று தனது வழமையான பாணியில் பேசுவார். 

அண்மயில் வாக்களித்த 20வது திருத்தச் சட்டம்வரைக்கும் கடந்த காலங்களிலெல்லாம் முஸ்லிம் சமூகத்துக்கு எதிரானவைகளுக்கு வாக்களித்து விட்டு எங்களது கருத்துக்கள் உள்வாங்கப்படவில்லை என்றதும் மடுவென்று தெரிந்து கொண்டுதான் காலை வைத்தேன் என்று கூறியதும்தான் வரலாறு.

ஆகவே, தனியலகு பெற்றுக் கொடுப்பதுதான் ஹக்கீமின் இலக்காக இருந்தால் ஒவ்வொரு ஊரிலும் அம்மக்களின் நிலபுலன்களையும் பிராந்தியங்களையும் பாதுகாப்பதற்காக அந்தந்த ஊரிலுள்ள கல்விமான்கள்
புத்திஜீவிகள் துறைசார் நிபுணர்களை உள்ளடக்கிய குழுக்களை உருவாக்கி அவர்களிடம் அந்தந்த ஊர்களின் நிலபுலன்களையும் ஊர்களின் எல்லைகளையும் வரையறை செய்து முடித்திருக்கவேண்டும். 

இவ்வாறு ஒவ்வொரு ஊரிலும் முடிக்கப்பட்டடவைகளைத்தொகுப்பாக எடுத்து ஒருதனியலகிற்கான இறுதி வரைபு தயார்படுத்தி முன்வைத்திருக்க வேண்டும். 

அந்த வரைபு சட்டத்துறை நிலஅளவை போன்ற துறைசார்ந்தவர்களின் முன்வைக்கப்பட்டு சரிகாணப்பட்ட பின்னர் பாராளுமன்றத்தில் முஸ்லிம்களின் தீர்வுத்திட்டமாக முன்வைக்கப்பட வேண்டும். இவ்வளவும் செய்து முடிப்பதற்கு எவ்வளவு காலம் தேவைப்படும்? இவ்வளவும் நடந்துள்ளதா?

திடீரெண 30ம் திகதி வரும் வழமை போன்று முஸ்லிம்களுக்கெதிராக ஹக்கீமும் நாம் அனுப்பிய எமது ஏனைய பிரதிநிதிகளும் வாக்களிப்பார்கள். வாக்களித்து விட்டு ஏதாவது காரணத்தைச் சொல்லுவார்கள். இதனால் கடலில் தள்ளிவிடப்படுவது முஸ்லிம் சமூகம்.

ஆகவே, யாரும் இந்தத் தனியலகுப் பூச்சாண்டியால் ஏமாந்துவிடவேண்டாம்.

By-Zainudeen Cader
செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog