Breaking

Tuesday

கட்டாரில் நல்ல பெயர் வாங்க நான்கு முஸ்லிம் அமைச்சர்களை துணைக்கு அழைத்து செல்லும் மைதிரி ..


இந்த நல்லாட்சி அரசாங்கம் முஸ்லிம்களை கறிவேப்பிலை போன்று தங்களது தேவைகளுக்காக பாவித்து வருவதாக முஸ்லிம் முற்போக்கு முன்னணியின் ஊடக செயலாளர் அஸாப் அஹமட் குறிப்பிட்டார்.

ஊடகங்களுக்கு அவர் அனுப்பியுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, 

இன்று ஜனாதிபதி மைத்திரிப்பால சிறிசேன கட்டாருக்கு விஜயம் செய்யவுள்ளார்.இவ்விஜயத்தின் போது அமைச்சர்கள்  ஹக்கீம், றிஷாத், பைசார் முஸ்தபா , முஜீபுர் ரஹ்மான்,ஆகியோரும் இணைந்துகொள்கின்றனர். 


இவர்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா அன்பின் நிமிர்த்தம் அழைத்துச் செல்லவில்லை என்பதை  இலங்கை முஸ்லிம்கள் நன்றாக புரிந்துகொள்ளவேண்டும்.இவர்கள் நான்கு பேரும் நான்கு கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்துபவர்கள்.

இவர்களை அழைத்துச் செல்லும் போது  இலங்கையில் உள்ள அனைத்து முஸ்லிம்களும் இவ்வரசுடன் உள்ளார்கள் என்ற செய்தி கட்டார் அரசுக்கு கொண்டு சேர்க்கப்படும்.

இதன்மூலம் இலங்கையில் முஸ்லிம்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகளால் இவ்வரசு முஸ்லிம்களுக்கு எதிரான நிலைப்பாடுடையது என்ற சர்வதேச நிலைப்பாட்டை தகர்த்து, இலங்கை அரசு கட்டார் அரசிடமிருந்து உதவிகளை பெற்றுக்கொள்ள இவ்விடயம் துணை புரியும். இலங்கை நாட்டின் முன்னேற்றம் கருதி இவ்வாறான விடயங்களை முஸ்லிம் அரசியல் வாதிகள் செய்வது பிழையல்ல ஆனால் முஸ்லிம்கள் இப்படி செயற்பட வேண்டுமாக இருந்தால் அந்த வகையில் முஸ்லிம்கள் இலங்கையில் நடாத்தப்பட வேண்டும். 

சவூதி தனவந்தர்களால் வழங்கப்பட்ட நுரைச்சோலை சுனாமி வீட்டுத் திட்டம் இன்னும் வழங்கப்படவில்லை.முஸ்லிம்கள் வாழ்ந்த பகுதிகளை வில்பத்து வர்த்தமானியாக அறிவித்த வர்த்தமானி இன்னும் இரத்துச் செய்யப்படவில்லை. 

இந்த ஆட்சி மாற்றத்தில் முக்கிய பேசுபொருளாக இருந்த அலுத்கமைக்கு நீதி பெற்றுக்கொடுக்கப்படவில்லை உற்பட இலங்கை முஸ்லிம்களின் இருப்பு பல  வகையில் கேள்விக்குறியாகியுள்ளது இந்த பின்னணியில் ஜனாதிபதியுடன் கட்டார் பயணமாவது பொருத்தமானதல்ல.

இந்த அரசாங்கம் முஸ்லிம்கள் கறிவேப்பிலையாக பயன்படுத்தப்படுவதை நாம் தொடர்ந்து அனுமதிக்க முடியாது.

ஜனாதிபதியுடன் கட்டார் செல்ல முஸ்லிம் அரசியல் வாதிகள் மறுப்பு வெளியிடாமல் தங்கள் பற்களை இழித்துக் கொண்டு ஊடகங்களில் செய்திகளை வெளியிட்டு வருவது தொடர்பில் நாம் வெட்கப்படவேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog