Breaking

Tuesday

ரயர் வெடித்ததனால் பாரிய விபத்து! 3முறை கரணம் அடித்த பிக்அப்! அரசியல்பிரமுகரும்பிரபலசமுகசேவையாளருமான ஜெயசிறில் அருந்தப்பு!


(காரைதீவு ருபர் சகா)

பிக் அப் வாகனம் பயணித்துக்கொண்டிருக்கையில் ரயர் வெடித்ததனால் விபத்து ஏற்பட்டுள்ளது.

இச்சம்பவம் நேற்று  காரைதீவு அம்பாறை வீதியில் சம்மாந்துறையைடுத்துள்ள பங்களாவடி கிளிவெட்டிப்பகுதியில் இடம்பெற்றுள்ளது.

முன் ரயர் வெடித்ததும் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து அருகிலுள்ள வயல்பிரதேசத்திற்குள் 3 தடவைகள் கரணம் அடித்து நின்றது.கண்ணாடிகள் சுக்குநூறாகியதுடன் வாகனமும் பெரும் சேதத்திற்குள்ளானது.

பிக்அப்பைச் செலுத்திக்கொண்டிருந்த தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட முக்கிய பிரமுகரும் பிரபல சமுகசேவையாளருமான கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் மயிரிழையில் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளார்.

மல்வத்தை வளத்தாப்பிட்டிப் பகுதியில் உதவி வழங்கும் நிகழ்வில் பங்கேற்பதற்காகச் சென்றுகொண்டிருந்த சமயம் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அவருடன் பயணித்த ஆசிரியரும் தெய்வாதீனமாக உயிர்தப்பியுள்ளார்.

அவர் உடனடியாக அம்பாறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் தற்போது மட்டக்களப்பு பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சைபெற்று வருகின்றார்.


சம்மாந்துறைப்பொலிசார் சம்பவ இடத்திற்குச்சென்று விசாரணைகளை மேற்கொண்டனர்.




செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog