Breaking

Monday

ஷிப்லி பாறுக்கினால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட காத்தான்குடி தெற்கு எல்லை வீதி புனரைமப்பு பணிகள் நிறைவு....!


கிழக்கு மாகாண சபையின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் முற்றுமுழுதாக காபெட் வீதியாக புனரமைப்புச் செய்யப்பட்டுக் கொண்டிருக்கும் காத்தான்குடி தெற்கு எல்லை வீதியினை முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், ஸ்ரீலங்கா ஷிபா பவுண்டேஷனின் தலைவருமான  பொறியியலாளர் ஷிப்லி பாறூக் 2017.10.07ஆந்திகதி நேரில் சென்று பார்வையிட்டார். 

மிக நீண்டகாலமாக புனரமைப்புச் செய்யப்படாமல் காணப்பட்ட இவ்வீதியினை புனரமைப்பு செய்து வழங்குமாறு தமிழ் மற்றும் முஸ்லிம் இரு இன மக்களும் விடுத்த வேண்டுகோளுக்கமைவாக முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் மேற்கொண்ட முயற்சியின் பலனாக இவ்வீதியானது தற்போது காபெட் வீதியாக புனரமைப்புச் செய்யப்பட்டு வருகின்றது.

இப்புனரமைப்பு பணிகளுக்காக சுமார் 85 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கடந்த 2017.09.06ஆந்திகதி இவ்வீதிக்கான அடிக்கல் நடப்பட்டு வேலைகள் ஆரம்பித்து வைக்கப்பட்ட இப்புனரமைப்பு பணிகள் மிகவும் துரித கதியில் மேற்கொள்ளப்பட்டு இன்றுடன் முழுமைப்படுத்தப்பட்டுள்ளது. 

இவ்வீதி புனரமைப்பு பணிகளை முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், ஸ்ரீலங்கா ஷிபா பவுண்டேஷனின் தலைவருமான  பொறியியலாளர் ஷிப்லி பாறூக் பார்வையிடச் சென்றபோது வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் பொறியியலாளர் மற்றும் தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் ஆகியோரும் வருகை தந்திருந்ததோடு புனரமைப்பு பணிகள் தொடர்பான மேலதிக ஆலோசனைகளையும்,கருத்துக்களையும் பரிமாறிக் கொண்டனர்.

செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog