Breaking

Monday

இலவசமாக இருதய சத்திரசிகிச்சைசெய்யத் தேவையானோர் தொடர்புகொள்ளலாம்..!


(காரைதீவு  நிருபர் சகா)

எனது பதவிக்காலத்துள் இப்பிரதேசத்திற்கு மட்டுமல்ல நாட்டின் சகல பகுதிகளுக்கும் இனமதபிரதேச கட்சி பேதங்களுக்கு அப்பால் தேவையான சுகாதார சேவைகளைச் செய்வேன்.

இவ்வாறு சொறிக்கல்முனையில் ஆரம்ப வைத்தியப்பிரிவிற்கான அடிக்கல்லை நட்டுவைத்து உரையாற்றிய சுகாதார பிரதியமைச்சர் பைசால் காசிம் கூறினார்.

மேலும் இனிமேல் இலவசமாக இருதய சத்திரசிகிச்சை செய்யதேவைப்படுவோருக்கு பொலநறுவையில் சத்திரசிகிச்சைசெய்ய ஏற்பாடு செய்துள்ளோம். எனவே அப்படி தேவைப்படுவோர் எனது செயலாளருடன் தொடர்புகொள்ளலாம். அதனைச்செய்வோம். 
மேலும் கண்வில்லைக்கு பல ஆயிரம் ருபாவை செலவு செய்த காலம் மலைக்கேறிவிட்டது. எனவே இனிமேல் கண் கற்றரக்ட் சிகிச்சை செய்யவிரும்புவோர் இலவசமாக கல்முனை ஆதாரவைத்தியசாலையில் செய்துகொள்ளலாம் எனவும் தெரிவித்தார்.


அம்பாறைநாவிதன்வெளிப்பிரிவிலுள்ள பின்தங்கிய சொறிக்கல்முனைக்கிராமத்தின்  ன் நீண்டகால கனவாகஇருந்துவந்த  நிரந்தர வைத்தியசாலைக்கட்டத்திற்கான அடிக்கல்நடுவிழா நேற்றுமுன்தினம் (21)சனிக்கிழமை  சிறப்பாக நடைபெற்றது. வைத்தியஅதிகாரி டாக்டர் சர்மிளா தலைமையில் அடிக்கல்நடுவிழா நடைபெற்றது.

சொறிக்கல்முனை பங்குத்ந்தை வண.பிதா. ஆர்.திருச்செல்வம் விடுத்தவேண்டுகோளுக்கமைவாக இவ்வதை;தியசாலை கட்டடம்  கிடைக்கவிருக்கிறது.

 2கோடி 40 இலட்சம் பெறுமதியான ஆரம்ப வைத்திய பராமரிப்புப் பிரிவிற்கான அடிக்கல்நடுவிழாவில்   சுகாதாரஅமைச்சின் செயலாளர் எம்.சி.அன்சார் கிழக்குமாகாண சுகாதாரத்திணைக்களப்பணிப்பாளர் டாக்டர் கே.முருகானந்தம் உள்ளிட்ட  உயரதிகாரிகள்   கலந்துகொண்டனர்.


பிரதியமைச்சர் பைசால் காசிம் மேலும் அங்கு உரையாற்றுகையில்;
எமது மாவட்டத்தின் மிகவும் பின்தங்கிய இப்பிரதேசத்தில் இத்தகைய வைத்தியசாலையை அமைப்பதில் மிக மகிழ்ச்சியடைகின்றேன்
இவ்வைத்தியாசாலையின் புதிய கட்டடம் இயங்கத்தொடங்கியதும் உடனடியாக அடுத்த தரத்திற்கு தரமுயர்த்த தேவையான நடவடிக்கைகளை எடுக்கவுள்ளேன். மாகாணப்பணிப்பாளர் முருகானந்தம் அதற்கான பத்திரங்களை அனுப்புமாறு வேண்டுகின்றேன்.

மேலும் இங்கு சுற்றுமதில் அமைப்பதற்கும் வைத்தியவிடுதி மற்றும் விடுதி அமைப்பதற்கும் நிதியொதுக்கவுள்ளேன்.

பொறியியலாளர் ஹென்றிஅமல்ராஜ்  சொறிக்கல்முனை வைத்தியசாலை விடயத்தில் கூடுதல் அக்கறை செலுத்தியிருந்தார். கண்வில்லை தொடர்பாக கொழும்பில் நாம் சந்தித்தவேளைகளில் இதுதொடர்பாக அவர் அடிக்கடி நினைவுபடுத்துவார்.

இவ்வவைத்தியசாலை பின்தங்கிய இப்பகுதிவாழ் மக்களுக்கு ஒரு வரப்பிரசாதம்.எனவே இதனை சரிவரப்பயன்படுத்தவேண்டும். என்றார்.
அமைச்சரின் இணைப்புச்செயலாளர் அன்ரன் சுதர்சனும் கலந்துகொண்டார்.செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog