Breaking

Monday

தமிழக மீனவர்களை இந்திய கடற்படையினர் தாக்கியதால் பரபரப்பு...!


இலங்கையில் உள்ள படகுகளை மீட்க சென்ற தமிழக மீனவர்களின் விசைப்படகுகளுக்கு மீன்வளத்துறையினர் குறைவான டீசல் மட்டுமே வழங்கியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக நடுக்கடலில் இந்திய கடலோர காவல்படையினருக்கும், தமிழக மீனவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. 

இந்த நிலையில், மீனவர்களின் வலைகளை கடலில் வீசிய  இந்திய கடலோர காவல்படையினர், மீனவர்களை நிர்வாணப்படுத்தி சித்ரவதை செய்ததாகவும் பாதிக்கப்பட்டவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

தமிழக மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும்போது இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை தாக்குவது, மீனவர்களின் வலைகளை அறுப்பது, அவர்களை கைது செய்து படகுகளை பறிமுதல் செய்வது என தொடர்ந்து பல அத்துமீறல்களில் ஈடுபட்டுவருகின்றனர். இந்நிலையில் கடந்த வாரம் தமிழக மீனவர்களின் சில படகுகளை இலங்கை அரசு விடுப்பதாக அறிவித்தது. இதனால் தங்கள் படகுகளை மீட்க சென்ற நாகை மாவட்ட மீனவர்களிடம் இந்திய கடற்படையினர் அத்துமீறி நடந்திருப்பதும், அவர்களை தாக்கி இருப்பதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog