Breaking

Tuesday

காத்தான்குடி வைத்தியசாலைக்கு மருந்துக் களஞ்சியசாலை அமைப்பதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு....!


முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், ஸ்ரீலங்கா ஷிபா பவுண்டேஷனின் தலைவருமான பொறியியலாளர் ஷிப்லி பாறூக் அவர்களின் முயற்சியினால் காத்தான்குடி தள வைத்தியசாலைக்கான மருந்துக் களஞ்சியசாலை அமைப்பதற்கான நிர்மாணப்பணிகள் மிக விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளன.

இதற்கென சுகாதார, போசனை மற்றும் சுதேஷ வைத்தியத்துறை அமைச்சினூடாக சுமார் பத்து மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதோடு, இக்கட்டிடத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு இம்மாதம் 13ஆம் திகதியளவில்  நாடாத்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. 

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக சுகாதார, போசனை மற்றும் சுதேஷ வைத்தியத்துறை அமைச்சர் கௌரவ பைசல் காசிம் அவர்கள் கலந்துகொண்டு இம்மருந்துக் களஞ்சியசாலை கட்டிடத்திற்கான அடிக்கல்லினை நாட்டி வைக்கவுள்ளார். 

அதிக மக்கள் பயன்பாட்டினைக்கொண்ட காத்தான்குடி தள வைத்தியசாலையின் செயற்றிரனினை மேலும் அதிகரிக்கச் செய்வதனூடாக மக்களுக்கான சிறந்த சேவையினை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் அவர்களினால் காத்தான்குடி தள வைத்தியசாலையினை மையப்படுத்தி பல்வேறுபட்ட பாரிய அபிவிருத்தி செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

இதில் ஒரு கட்டமாக நிர்மாணிக்கப்படவுள்ள இம்மருந்துக் களஞ்சியசாலையினூடாக மருந்துகளை உரிய முறையில் களஞ்சியப்படுத்தி விநியோகிக்க முடிவதோடு காத்தான்குடி தள வைத்தியசாலையின் சேவைத்திறன் மென்மேலும் அதிகரிக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog