Breaking

Monday

புத்தளம்,மதுரங்குளி பிரதேசத்தில் பஸ் விபத்து பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு...


செய்தியாளர் சப்ராஸ்

புத்தளம் கொழும்பு பிரதான பாதையின் மதுரங்குளி பிரதேசத்தில் இன்று அதிகாலை 8.15 மணியளவில் இடம்பெற்ற பஸ் விபத்தில்  படுகாயமடைந்த நிலையில் சிலாபம் மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வந்த நபர்களில் மேலுமொருவர் உயிரிழந்துள்ளார். அதன்படி , இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. 

மேலும் , 43 பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதாக எமது செய்தியாளர் சப்ராஸ் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த இந்த பஸ் குறித்த பாதையில் முச்சக்கர வண்டி ஒன்றை முந்திச்செல்ல முற்பட்ட வேளையிலேயே இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

குறித்த பஸ் வண்டியானது அதிக வேகத்துடன் பயணித்த காரணத்தாலேயே இந்த விபத்து இடம்பெற்றிருகலாமென தெரிவிக்கப்படுகின்ற நிலையில் புத்தளம் பொலிஸார்  மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சம்பவம் தொடர்பில் பஸ்ஸின் சாரதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில் , அவர் காயமடைந்துள்ளதால் புத்தளம் மருத்துவமனையில்   அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog