Breaking

Sunday

சம்மாந்துறை பிரதேசத்தில் அபிவிருத்தி செய்யப்பட்ட வீதிகளை பார்வையிட கள விஜயம்.


சம்மாந்துறை பிரதேச செயலகப் பிரிவில் நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் மேற்கொள்ளப்பட்ட வீதிகளை திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இனைத் தலைவருமான எம்.ஐ.மன்சூர் மற்றும் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிர் ஆகியோர்கள் தலைமையில் இன்று வீதிகளை நேரில் சென்று களவிஜயம் மேற்கொண்டனர்.

இதன்போது ஆஸ்வத்திரி 11ஆம் குறுக்கு வீதி, வெள்ளைக் காளியர் வீதி, 40 வீட்டுத்திட்ட பிரதேச வீதி உள்ளிட்ட பல வீதிகளை நேரில் சென்று பார்வையிட்டதுடன் பிரதேசத்தில் வாழும் மக்களிடமும், பிரதேச சமூக அமைப்புகளிடமும் வீதியின் குறைபாடுகளையும் ஏனைய குறைபாடுகளையும் கேட்டரிந்துகொண்டனர்.

இதன்போது சம்மாந்துறை பிரதேச சபை செயலாளர் ஏ.ஏ.சலீம், சம்மாந்துறை பிரதேச சபையின் தொழிநுட்ப உத்தியோகத்தார் எம்.எம்.முஸ்தபா, பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்பாளர் வசீர், ஆகியோர்களும் கள விஜயத்தில் கலந்துகொண்டனர்.





செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog