Breaking

Tuesday

கல்முனையில் எரிபொருள் பெற மக்கள் முண்டியடிப்பு..!


காரைதீவு  நிருபர் சகா

கல்முனைப்பிராந்தியத்தில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவும் என்ற அச்சத்தில் இன்று மக்கள் பெரிபொருள் நிரப்பு நிலையங்களில் குவியத்தொடங்கியுள்ளனர்.

அதற்கேற்றாற்போல் சில நிலையங்களில் பெற்றோல் இல்லை என்ற அறிவித்தல் பலகை போடப்பட்டுள்ளது. இதுவும் மக்கள் மனங்களில் தட்டுப்பாடு என்ற செய்தியை மேலும் வலுப்படுத்திறநிற்பதால் மகக்ள் முண்டியடிக்கின்றனர்.

இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு தீவிரமடைந்த நிலையில் நாட்டின்  பல்வேறு பகுதியில் மோதல் நிலை ஏற்பட்டுள்ளது.
இன்றைய தினம் எரிபொருள் பெற்றுக் கொள்வதற்கு எதிர்பார்ப்புடன் வருகைத்தந்தவர்களுக்கு நீண்ட வரிசையில் நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

பல எரிபொருள் நிலையங்களில் எரிபொருள் கிடைப்பதில்லை என குறிப்பிடப்படுகின்றது. அத்துடன் எரிபொருள் கிடைக்கும் நேரத்தை உறுதியாக கூற முடியாதென எரிபொருள் நிலையங்களின் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளைஇ எரிபொருள் ஓரளவு உள்ள இடங்களில்இ பதற்றமான நிலைமை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொம்பனி தெரு எரிபொருள் நிலையத்தில் சற்று நேரத்திற்கு முன்னர் பதற்றமாக நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வாகன சாரதிகள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலையில்இ போத்தல்களில் எரிபொருளை பெற்றுக்கொள்வோர் இடையில் குறுக்கிட்டு எரிபொருளை வாங்க முயற்சின்றனர்.

எனினும் வாகன சாரதிகளுக்கு மட்டும் எரிபொருள் வழங்க முடிவு செய்துள்ளமையால் போத்தல்களில் பெற்றுக்கொள்ள வருவோர் மோதல்களில் ஈடுபடுகின்றனர்.

இதன் காரணமாக பல எரிபொருள் நிலையங்களில் வன்முறைச் சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன.

இதேவேளைஇ நவீன மோட்டார் வாகனங்களுக்கு அதிகமான எரிபொருள் வழங்கப்படுவதாகவும்இ மோட்டார் சைக்கிள் மற்றும் சாதாரண மோட்டார் வாகனங்களுக்கு எரிபொருள் வழங்கும் நடவடிக்கை மந்தமான நிலைமையில் முன்னெடுக்கப்படுவதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
எப்படியிருப்பினும் எரிபொருள் வழங்கப்படுகின்ற எரிபொருள் நிலையங்களுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog