Breaking

Wednesday

சம்மாந்துறைக்கு இரு சபைகள் காலத்தின் தேவை !



















இரு சபைகள்  ஏன் என்பதை விளக்க அதைப்பற்றித் தெரிந்தவர்கள்  தவறியதால்  இன்று சிலர் அதைத் தவறாகப் புரிந்து கொண்டு எம்பி மன்சூரையும் மற்றும் இதனுடன் சம்பந்தப்படடவர்களையும் தேவை இல்லாமல்  விமர்சிக்கின்றார்கள் இது அவர்களின் அறியாமையை உணர்த்துகின்றது. இரு சபைகளோ அல்லது மூன்று சபைகளோ உருவாக்குவது என்பது ஊரைப்பிரிப்பதோ அல்லது துண்டாக்குவதோ அல்ல மாறாக அதை முறையாக நிர்வாகித்து அந்த இடத்துக்குத் தகுந்த அபிவிருத்திகளை முறையே செய்வதாகும்.

ஏன் இரு சபைகள் ??

பெரிய நிலப்பரப்பைக் கொண்ட சம்மாந்துறையை எடுத்துக்கொண்டால் ஊரில் உள்ள அத்தனை பேர்களும் ஒரே வருமானம் (Income) கொண்டவர்கள் அல்ல. அதே நேரம் ஊரின் எல்லாப் பகுதிகளும் ஒரே மாதிரியான உள் கட் டமைப்பு (Infrastructure) கொண்டதல்ல   இந்த இரண்டையும் கருத்தில் கொண்டு மக்களின் நன்மை கருதித்தான் அரசாங்கமும் உள்ளூராட்சி அமைச்சும் இந்த முடிவை எடுக்கின்றது.

இரு சபைகள்  உருவானால் என்ன நன்மைகள்

சம்மாந்துறையை இரு சபைகளாகப் பிரித்தால்.....

 1) அதிகாரம் பரவலாக்கப்படும்.
2) அந்தப்பகுதிக்கான உடனடி தேவை அரசாங்கத்தினால் இலகுவாக தீர்க்கப்படும்
3) இரு சபைகள் வருகின்ற போது நிருவாக மற்றும் வேலைகளுக்கு அதில் தொழில் புரிய பலபேர் தேவைப்படும் இதனால் சம்மாந்துறையில் பலருக்கு தொழில் வாய்ப்புக்கிடைக்கும்.
4) இரண்டு தவிசாளர்கள் தேவைப்படுவது போன்று அதனுடன் சார்ந்த அனைத்து தொழில்களும் இரண்டிரண்டாகவே இருக்கும் இதனால் பல தொழில் வாய்ப்புக்களும் துரித அபிவிருத்தியும் உண்டாகும்.
5) ஊரின் உள் கட்டமைப்பு (Infrastucture) வேலைகள் துரிதமாக நடைபெற இரு சபைகள் இருப்பது ஒரு பெரிய வரப்பிரசாதமாகும்.

இரு சபைகள்  என்பது ஒன்றும் புதிதல்ல....

சம்மாந்துறை காலம் காலமாக இரு சபைகள் கொண்டுதான் நிர்வகிக்கப்பட்டது என்பது இன்றுள்ள இளைஞர்களில் எத்தனை பேருக்குத்தெரியும்  ????

சம்மாந்துறையின் சரித்திரத்தை ஒரு முறை புரட்டிப் பார்ப்போம். சம்மாந்துறையில் ஒரு பட்டின சபையும் ஒரு கிராம சபையும் நமது பாட்டனார் பூட்டனார் காலத்தில் இருந்து வந்த ஒன்றுதான். அப்படி இருந்த காலங்களில் நாங்கள் ஒன்றும் பிளவுபடவில்லை என்பதை இங்கே சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.  அண்மைக்காலத்தில்தான் அது பிரதேச சபையாக அன்றைய தேவையினால் ஒன்றாக்கப்பட்டது. ஆனால் இன்று இரு சபைகள் காலத்தின் தேவை என்பதை உணருங்கள்.

அன்று கிராம சபை இருந்த இடத்தில் தான் இன்றைய புதிய நகரசபைக் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது  என்பது நம்மில் எத்தனை பேருக்குத்தெரியும்??

மாநகர சபையும் பிரதேச சபையும் இருந்தால் ......

சம்மாந்துறையில்  ஒரு மாநகர சபையும் , பிரதேச சபையும்  கொண்டதாக  உருவாக்கினால்  நிச்சயமாக நமது ஊரின் அதிகாரம் பரவலாக்கப்படுவதுடன் அபிவிருத்தியும் பரவலாக்கப்பட்டு நாம் ஆசைப்படுகின்ற நமது சம்மாந்துறையை சம்மான்பூராக்கும் கனவும் நிறைவேறும்  இன்ஷா அல்லாஹ்

By: மாஹிர் மொஹிடீன்


செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog