Breaking

Wednesday

நீதிமன்ற உத்தரவையடுத்து வீதி மறியல் போராட்டம் வாபஸ்!இன்று கல்முனையில் மீண்டும் ஹர்தால்?


காரைதீவு  நிருபா சகா

சாயந்தமருதில் உள்ளுராட்சிசபையைவேண்டி நடாத்தப்பட்டுவரகின்ற மக்கள்எழுச்சிப்போராட்டம் ஹர்த்தால் நேற்று(31) வீதிமறியல்போராட்டமாக உருவெடுத்திருந்தது.அதனை விலக்கிக்கொள்ளுமாறு அங்கவந்த பொலிஸ் உயரதிகாரிகள் வேண்டுகோள்விடுத்திருந்த போதிலும் ஆர்ப்பாட்டக்காரர்கள் அதற்கு இணங்கவில்லை.

அதனால் பொலிசார் நீதிமன்றத்தில் தடையுத்தரவைப் பெற்றுக்கொண்டு அதனை பள்ளிவாசல் நிருவாகத்திடம் கொடுத்தனர். அதன்பின்னர் நேற்று இரவு வீதி மறியல் போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது.

அதன்பின்னர் அதேவீதியில் மார்க்க நிகழ்வகளை நடாத்தி அங்கிருந்து விடைபெற்றனர்.

இருப்பினும் இன்று(1) புதன்கிழமையும் அங்க ஹர்த்தால் கடையடைப்புப்போராட்டம் தொடருமென தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இன்று புதுவடிவம் பெறலnமென தெரிகிநது.

இதேவேளை கல்முனையை நான்காகப் பிரிக்கக்கோரியும் சாய்நதமருதுக்கு தனியான சபை வழங்கக்கூடாதென்று கோரியும்  இன்றும் நாளையும் கல்முனையில் ஹர்த்தால் ஆர்ப்பாட்டம் இடம்பெறவிருப்பதாக மற்றுமொரு ஊர்ஜிதமான தகவல் தெரிவிக்கின்றது.




செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog