Breaking

Thursday

ஆறுகள் போன்று காட்சியளிக்கும் கோணாவத்தை வீதிகள்...


எம்.ஜே.எம்.சஜீத்

கடந்த சில தினங்களாக பெய்துவரும் மழையினால் கோணாவத்தை பிரதேசத்திலுள்ள அநேகமான வீதிகள் நீரில் மூழ்கியுள்ளன.

கோணாவத்தை பிரதேசத்தில் மிக நீண்டகாலமாக மோசமடைந்த நிலையில் குன்றும் குழியுமாக காணப்படும் இவ்வீதிகளே நீரில் மூழ்கியுள்ளன.

கோணாவத்தை பிரதேசத்திலுள்ள OPA வீதி, கடற்கரை வீதி, ஹாஜியார் வீதி, RDS வீதி, ஜப்பார் பொலிஸ் வீதி, அந்-நூர் பாடசாலை பின் வீதி, என பல வீதிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

இதனால் பாடசாலை செல்லும் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவதுடன், அப்பிரதேச மக்களும் பல அசௌகரியங்களை எதிர்கொள்கின்றனர்.

கோணாவத்தை பிரதேசத்தில் 85வீதமான மக்கள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசிக்கு ஆதரவு வழங்கி வரும் நிலையில் அக்கட்சியினால் அக்கிராமத்தில் உள்ள வீதிகள் உட்பட எந்தவிதமான உட்கட்டமைப்பு அபிவிருத்திகளும் மேற்கொள்ளப்படவில்லை.

நீண்டகாலமாக சேதமுற்றுள்ள இவ்வீதிகள் தொடர்பில் யாரும் கவனத்திற்கொள்ளாமை தங்களது கிராமத்தை புறக்கனிக்கும் செயற்பாடு எனவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

தேர்தல் காலம் தங்களது கிராமத்திற்கு வந்து வாக்கு வேட்டையாடும் அரசியல்வாதிகள் அதிகாரத்திற்கு வந்தவுடன் தங்களது கிராமத்தை திரும்பிக்கூட பார்ப்பதில்லை எனவும் மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

எனவே பாடசாலை மாணவர்களும், பொதுமக்களும் பிரயாணம் செய்வதற்கு உகந்தவாறு மேற்குறித்த வீதிகளை அட்டாளைச்சேனை பிரதேச சபை செப்பனிட்டு தரவேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.





செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog