Breaking

Thursday

அக்கரைப்பற்று வலய கல்வி பணிப்பாளரின் மறைவிற்கு அனுதாபம் செய்தி...


(எம்.ஜே.எம்.சஜீத்)

அக்கரைப்பற்று  வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.எம்.அகமது லெப்பை அவர்களது திடிர் மறைவு பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியதுடன், அவரது இழப்பு கல்வித் துறையில் ஈடு செய்யமுடியாத ஒன்றாகும் என சிரேஷ்ட ஊடகவியலாளரும், அட்டாளைச்சேனை அல்-அர்ஹம் வித்தியாலயத்தின் அபிவிருத்திக் குழுவின் செயலாளருமான சலீம் றமீஸ்.ஜேபி தனது அனுதாப செய்தியில் தெரிவித்தார்.

காரியாலய பணிக்காக கொழும்பு சென்ற வலயக் கல்விப் பணிப்பாளர் திடிரென ஏற்பட்ட சுகயீனம் காரணமாக கொழும்பு வைத்திசாலை ஒன்றில்(08) மரணமடைந்த செய்தி கேட்டதும் அதிர்ச்சியும், கவலையும் அடைந்ததாகவும் மேலும் தெரிவித்தார்.

தங்களது பாடசாலை விடயம் தொடர்பாக பாடசாலை அபவிருத்திக் குழு உறுப்பினர்கள் மற்றும் பெற்றோர்களுடன் கல்விப் பணிமனைக்குச் சென்று நேரில் சந்தித்த போது அன்பாக எங்களை வரவேற்று பாடசாலை நியாயமான பிரச்சனைகளை அவதானமாக கேட்டு அதனை ஏற்றுக் கொண்டு மென்மையான முறையில் பதிலளித்து, இதற்கமைவாக நேரடியாக எமது பாடசலைக்கும் வருகை தந்து நிலைமையினை நேரில் அறிந்து தீர்வு பெற்றுத் தருவதாகவும் சென்றார். 

அவரது வருகை. பணிவான உறுதி மொழி எமது பாடசாலை சமூகத்தின் மத்தியில் நம்பிக்கையும், அவர் மீதான அன்பு, நல்லுறவினையும் பெற்றிருந்தது.

இறுதியாக கிண்ணியா வலயக் கல்விப் பணிப்பாளராக கடமையாற்றி விட்டு, அக்கரைப்பற்று வலயத்திற்கு இடமாற்றம் பெற்று வந்த இவர் தனது சேவையின் ஓய்வுக் காலத்தில் இருப்பதாகவும், இதற்குள் தன்னால் முடிந்த கல்விப் பணியினை முழு அக்கரைப்பற்று வலயத்திற்கும் செய்யவுள்ளதாகவும் நேரில் சந்திக்கின்ற சந்தர்ப்பத்தில் என்னிடம் கூறுவார்.

 அவருடைய மென்மையான பேச்சு, அடக்கமான அனுகுமறை எங்கள் கண்முன்னே தோன்றுகின்றது. இவரது கல்விப் பணியினை முழுமையாக பெறமுடியாமல் போனதையிட்டு இன்று அக்கரைப்பற்று வலயமே கண்ணீர் சிந்துகின்றதை என்னால் உணர முடிகின்றது. எங்களை விட்டுப் பிரிந்த வலயக் கல்விப் பணிப்பாளரை அல்லாஹ் பொருந்திக் கொள்ள வேண்டும். இவருடைய பாவங்களை மன்னித்து ஜன்னதுல் பிர்தௌஸ் எனும் உயர்ந்த சுவர்க்கத்தை வழங்க அனைவரும் பிரார்த்திக்க வேண்டும் எனவும் சலீம் றமீஸ் மேலும் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog