Breaking

Wednesday

சாய்ந்தமருது பள்ளிவாசலின் ஏற்பாட்டில் ஒரேயொரு சுயேட்சை அணி: வேட்பாளர்கள் தெரிவு:வேட்புமனு தயார்!


காரைதீவு  நிருபர் சகா

கல்முனை மாகரசபைத் தேர்தலில் சாய்ந்தமருது சார்பில் போட்டியிட சாய்ந்தமருது ஜூம்ஆப் பள்ளிவாசலின் ஏற்பாட்டில் சுயேட்சைக்குழு களமிறங்கவுள்ளது.
அதற்கான வேட்பாளர்கள் தெரிவுசெய்யப்பட்டு களமிறக்கப்பட்டுள்ளனர்.

சாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாசல் மக்கள் பனிமனையில் பள்ளிவாசல் தலைவரினால் சாய்ந்தருது உள்ளூராட்சிமன்றத்தினை பெறும் போராட்டத்தின் நவம்பர் எழுச்சியின் ஒரு அங்கமான கல்முனை மாநகரசபைக்கான தேர்தலில் சுயேட்சையாக களமிறங்கி சாய்ந்தமருதை ஏமாற்றிய அரசியல்கட்சிகளுக்கு பாடம் புகட்டுதலும் ஊரின் ஒற்றுமையையும் எடுத்து காட்டுதலும் எனும் தீர்மானத்தின் அடிப்படையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சுயேட்சைக்கான வட்டாரங்களுக்கான உறுப்பினர்கள் தெரிவினை பனிமனை தலைவரினால் அறிவிக்கப்பட்டது.


இத்தெரிவானது கணிப்பீடு சமத்துவமானதும் நியாயமானதுமா தேர்வாகும். ஏனெனில் எல்லோரும் ஏதோ ஒரு கட்சி சார்பானர்களாவே இருப்பர் .ஆனால் சகலரையும் இணைத்து சிறந்த தேர்வாக ஒருவரும் இவ் சுயேட்சைக்கு கட்சி சாயம் பூச முடியாத வண்ணம்தேர்வு நடைபெறுள்ளது. 

எது எப்படி இருப்பினும் இலக்கு உள்ளூராட்சி மன்றம் பெறுவதே அதற்காக ஒற்றுமையை பாராளுமன்றம் வரை பறைசாற்றுவது கடமையாகும். ஆகவே தனிப்பட்ட கோபதாபங்களை ஒதுக்கிவிட்டு எமது சுயேட்சைகுழுவை வெற்றிபெற உழைப்போம். எனக்கூறப்பட்டுள்ளது.

தெரிவான வேட்பாளர்களின் விபரம்:
18ம் வட்டாரம்- ஜலீல் (ஜவாஹிர் டவுன் ட்ரவல்ஸ்)
19ம் வட்டாரம்- முஹர்ரம் பஸ்மீர் 
20ம் வட்டாரம்- ஆயிஷா சித்திகா (சட்டத்தரனி)
21ம் வட்டாரம்- அஸீம் 
22ம் வட்டாரம்- ரபீக் (நில அளவையாளர்) 
23ம் வட்டாரம் -அஸீஸ் (ஆசிரியர் )
செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog