Breaking

Sunday

பாண்டிருப்பில் டெங்கு காய்ச்சலால் நான்கு வயது சிறுவன் மரணம்!


காரைதீவு  நிருபர் சகா

கல்முனையடுத்துள்ள பாண்டிருப்பில் நேற்று  (08)டெங்கு காய்ச்சல் காரணமாக நான்கு வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
பாண்டிருப்பு திருவள்ளுவர் வீதியை சேர்ந்த சசிகரன் ஜெனிதா அவர்களின் மகன் கபிஸ்கரன் என்னும் நான்கு வயது சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கடந்த சில காலமாக இவர்கள் பெரிய நீலாவணையில் வாடகைக்கு வசித்து வந்துள்ளனர். அந்த நிலையிலே குறித்த சிறுவன் காய்ச்சலால் பீடிக்கப்பட்டுள்ளான்.

கல்முனை ஆதாரவைத்தியசாலையில் கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் அனுமதிக்கபட்டிருந்த நிலையிலே நேற்றுஇவ்வாறு உயிரிழந்துள்ளான்.

பரிதாபமான இச் சிறுவனின் உயிரிழப்பு அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது
செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog