Breaking

Thursday

O/Lலும் உஜாலாவும்.


மாணவர்கள் இன்றைய தினம் O/L பரீட்சை மூடித்து விட்டு வீதிகளில் நின்றுகொண்டு ஒருத்தருக்கொருத்தர் துரத்தித் துரத்தி அவர்களின் வெள்ளை ஆடைகளில் உஜாலா திரவத்தினை தெழிப்பதை காணக்கிடைத்தது.

உண்மையில் இது என்ன கலாச்சாரம்.? என்ன பண்பாட்டு என்பது எனக்குத் தெரியாது தெரிந்தவர்கள் பதிவிடலாம்.

இது போன்ற கலாச்சார பண்பாடுகள் படிக்கின்ற மாணவர்களுக்கு தேவைதானா.? முந்திய காலங்களில் சாமத்திய வீட்டில் பெண்கள் ஒருத்தருக்கொருத்தர் தண்ணீர் தெழித்து விளையாடுவார்கள் அது காலப்போக்கில் மறைந்து போய் அதற்கு மாறாக இன்று மணவர்களிடையில் உஜாலா தரவம் தெழித்து விளையாடும் நாகரிகம் வளர்ந்துள்ளது இது உண்மையில் தேவையானதோர் விளையாட்டுத்தானா....???

"மாணவர்கள் கேலிக்ககையாக "கெமிக்கல்" கலந்த திரவமான உஜாலா தெழித்து விளையாடியதில் அது தவறாக கண்ணுள் சென்றதனால் மாணவர் இரு கண் பர்வையும் இழந்துள்ளார். இப்படியொரு செய்தி படிக்க கிடைத்தால் உங்கள் மனநிலை எப்படியிருக்கு....?? 
"அல்லாஹ் காப்பாற்றனும்"

இப்படியொரு செய்தி எப்போது படிக்க கிடைக்கக் கூடாதென்பது எனது கருத்து.

உங்கள் கருத்து...?

முஹம்மட் ஜெலீல்,
நிந்தவூர்.
செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog