Breaking

Thursday

தமிழ் முற்போக்கு முன்னணி சில மாவட்டங்களில் ஜ.தே.கட்சியுடன் இணைந்து யானைச் சின்னத்தில்.


அஷ்ரப் ஏ சமத்)

தமிழ் முற்போக்கு முன்னணி சில மாவட்டங்களில் ஜ.தே.கட்சியுடன் இணைந்து யானைச் சின்னத்திலும்; கேட்பதற்கு உடன்பாடு கிடைத்தது. சில சபைகளில் உடன்பாடு கிட்டவில்லை.    கொழும்பு மாநகரம், கண்டி சில சபைகளில்   உட்பட சில  உள்ளுராட்சி சபைகளில் “ஒருமித்த  முற்போக்கு முன்னணி;”  என எங்களது கட்சியை மாற்றி ஏணிச் சின்னத்தில் தனித்து போட்டியிடுகிறோம்.;  என இன்று(20) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையில் அமைச்சர் மனோ கனேசன் கருத்து தெரிவித்தார்.

இவ் ஊடக மாநாட்டில் அமைச்சர் திகாம்பரம், மேல் மாகணசபை உறுப்பிணர்களான குகவரன் மற்றும் குருசாமியும் கலந்து கொண்டனர்.

தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் 

நுவரேலியா, கண்டி, மாத்தளை, பதுளை கேகாலை, கம்பஹா, இரத்திணபுரி, கொழும்பு ஆகிய மவாட்டங்களிலும் எமது கட்சி உள்ளுராட்சி சபைகளிள் போட்டியிடுகின்றோம். 

கொழும்பில் ஜ.தே.கட்சியில் இணைந்து போட்டியிடயிருந்தோம். ஆனால் ஜ.தே.கட்சியில் கொழும்பு அமைப்பாளர்கள் ஆசன பங்கீடுகளில் எமது பிரநிதித்துவத்தையும் எமது கட்சியையும் இல்லாமல் செய்ய முனைகின்றார்கள் அதற்காகவே நாம் கொழும்பில்  தணித்து போட்டியிடுகின்றோம். 

இந்த நாட்டின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவை உருவாக்கியவர் நாங்கள் - இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஜனாதிபதி தேர்தலின்போது முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு அளித்தவர்கள் தற்பொழுது இந்த ஜனாதிபதியுடன் தேர்தல் உடன்படிக்கை செய்துள்ளனர். அதனை பற்றி நாங்கள் அலட்டிக் கொள்ளவில்லை. இந்த ஆட்சியின் நாங்கள் பங்காளிகள் எங்களுக்கு இந்த ஆட்சியில் உரிய பங்கினைப் எவ்வாறேனும் பெற்றுக் கொள்வோம். நாம் எவ்வித விட்டுக் கொடுப்பையும் செய்யவில்லை. 

நுவரலியாவில் 4 புதிய பிரதேச சபையைப் பெற்றுக் கொடுத்துள்ளோம். ஆகவே நுவரேலியா மவாட்டத்தின் பொறுப்பாக அமைசச்ர் திகாம்பரம் உள்ளார் அவர் பெப்ரவரி 10ஆம் திகதி 4 சபைகளையும் வெற்றிபெற்றுவிட்டுத்தான் கொழும்புக்கு வருவாh.; எமது கட்சியில் நுவரேலியா மாவட்டத்தில் முஸ்லீம் காங்கிரஸ் கட்சி அங்கத்தவர்களும் கேட்கின்றனர்.    
செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog