Breaking

Friday

கல்முனை த.தே.கூட்டமைப்பு வேட்பாளர் தெரிவிலும் சிக்கல்!


காரைதீவு  நிருபர் சகா

எதிர்வரும் உள்ளுராட்சித்தேர்தலில் கல்முனை மாகநரசபை சார்பாக போட்டியிடவிருந்த தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு அணியினுள் வலுவான குழப்பம் நிகழ்ந்துவருகிறது.

தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளின் தலைவர்கள் கொழும்பில் நடாத்தி எடுக்கப்பட்ட தீhமானங்கள் தற்போது வவுனியா பட்டிருப்பு கல்முனை போன்ற இடங்களில் தளர்வுற்று வருகிறது.

அம்பாறை மாவடட்டத்தைப்பொறுத்தவரை திருக்கோவில் காரைதீவு கல்முனை மாகநரசபை எதிர்க்கட்சித்தலைவர் உள்ளிட்ட சபை ரெலோவிடம ஒப்படைக்கப்படுவதாகவும் நாவிதன்வெளி ஆலையடிவேம்பு பிரதேசசபைகள் தமிழரசுக்கட்சிகள் வசம் ஒப்படைப்பதெனவும் கூறப்பட்டது.

கல்முனை மாகநரசபையைப் பொறுத்தவரை 8 வட்டாரங்கள் தமிழர் பிரதேசங்களைச்சார்ந்நதது. இதில் 5 வட்டாரங்கள் ரெலோவிற்கும் 3வட்டாரங்கள் தமிழரசுக்கட்சிக்கும் என முன்னர் தீர்மானிக்கப்பட்டிருந்தது.
எதிர்க்கட்சித்தலைவர் பதவிக்காக ரெலோ உபதலைவரும் முன்னாள் கல்முனைமாகரசபை எதிர்க்கட்சித்தலைவருமான ஹென்றிமகேந்திரன் போட்டியடவேண்டும் என்ற கருத்தும் நிலவிவந்தது.

இந்த நிலையில் தமிழரசுக்கட்சிக்கு வெளியிலிருந்து அண்மைக்காலத்தில் உட்புகுந்த ஒரு சிலரால் மேற்படி விகிதாசாரம் குழப்பப்பட்டு தமிழரசுக்கட்சிக்கு 4உம் மீதி 4இல் 3 ரெலோவிற்கும் 1 புளொட்டுக்கும் வழங்கப்படவேண்டும் என்ற அழுத்தம் பிரயோகிக்கப்பட்டுவருகிறதென கல்முனை தமிழ் இளைஞர்குழாம் தெரிவிக்கிறது.

இவ்விகிதாசாரப்படி நடந்துகொள்ளவேண்டுமென த.அ.கட்சியின் செயலாளாரும் தன்னிடம் கேட்டிருந்ததாக ஹென்றிமகேந்திரனும் உறுதிசெய்தார்.

இதனிடையே கல்முனை தமிழ் இளைஞர்குழாமொன்று ஹென்றி மகேந்திரனை அணுகி நீங்கள் போட்டியிடவேண்டுமெனவும் இல்லாவிட்டால் நாங்கள் கல்முனைத்தமிழர் சார்பில் சுயேச்சையில் தரமான வேட்பாளர்களை நிறுத்தி போட்டியிடவேண்டிநேரிடும் எனவும் ஆணித்தரமாகக்கூறியுள்ளனர்.

கட்சி அழுத்தங்கள் மற்றும் கல்முனைத்தமிழர்கள் இளைஞர்களின் அழுத்தங்கள் என்பனவற்றால் அவர்  எதிர்க்கட்சித்தலைவர் வேட்பாளர் என்ற ஸ்தானத்திலிருந்து ஒதுங்கலாமெனவும் கூறப்படுகிறது.

பங்காளிக்கட்சகளுக்கிடையிலான ஆசனப்பங்கீட்டு ஒப்பந்தம் பரவலாக மீறப்பட்டுவருவதால் மீண்டும் கூட்டமைப்பிற்குள் குழப்பமேற்பட வாய்ப்புள்ளதாக அரசியல்விமர்சகர்கள் குறிப்பிடுகின்றார்கள்.

கல்முனை மாகரசபைக்கான வேட்பமனு எதிர்வரும் 18ஆம் திகதியிலிருந்து தாக்கல் செய்யபடவிருப்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog