Breaking

Friday

சம்மாந்துறையின் பொருளாதார அபிவிருத்திக்கும் வேலையில்லாத் திண்டாட்டத்துக்கும் எப்படி முற்றுப்புள்ளி வைப்பது ?

By: மாஹிர் மொஹிடீன்


சம்மாந்துறையின் எதிர்காலப் பொருளாதார  அபிவிருத்தி நெல்,விவசாயத்தினால் மட்டும் தன்னிறைவு பெறாது காரணம் இன்று நமது வாலிபர்கள் எதிர் நோக்கும் வேலையில்லாப் பிரச்சினைகள் இனிவரும் காலங்களில் கூடிக்கொண்டு போகுமே தவிர குறைவதற்கு எவ்வித சாத்தியமும் இல்லை.

அத்துடன் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் வாழ்க்கைச்செலவை எப்படி எதிர்கொள்வது? நமது அடிப்படைத்தேவைகளான உணவு, உடை, வீடு போன்ற அத்தியாவசியமான தேவைகளுக்கு வருங்காலத்தில் எப்படி தன்னிறைவு காண்பது என்ற கேள்விகள் எல்லோர் மனதிலும் அன்றாடம் கேட்கப்படும் கேள்விகளாகும்
இந்தக் கேள்விகளுக்கு  ஒரு வரியில் பதில் சொல்லிவிட முடியாது .

ஒரு தூர நோக்குப் பார்வையுடன் தான் பதில் அளிக்க முடியும். இனி ஒவ்வொரு பிரச்சினைக்கும் எப்படித்தீர்வு காணலாம் என்பதைப்பார்ப்போம்.

இளைஞர்களின் வேலையில்லாப் பிரச்சினைகள் :
இந்தப்பிரச்சினையை நாம் ஒரு தூர நோக்கோடும் சர்வதேச ரீதியிலும் அணுகவேண்டும் அதுதான் இதற்கு ஒரே ஒரு பதில்.........எப்படி என்று ஆராய்வோம்..

இன்றைய இளைஞர்கள் இலகுவாக தொழில் வாய்ப்பைபெறவேண்டுமென்றால் தொழில் சார்ந்த தொழில் நுட்பப் பாட நெறிகளைப் படிக்க வேண்டும்.காரணம் மத்திய கிழக்கு நாடுகளிலும், மேற்கத்திய நாடுகளிலும் கட்டிட நிர்மாணத்துறையிலும் சுகாதார வைத்தியத்துறையிலும் மீடியாத்துறையிலும் ஏராளமான தொழில் வாய்ப்புக்கள் உண்டு. மேலும் இந்த வகையான வேலைகளுக்கு கனடா, அவுஸ்திரேலியா மற்றும் மேற்கத்திய நாடுகளில் நல்ல சம்பளம் கொடுக்கின்றார்கள்  - பிளம்பிங் (Plumbing) பயிப் பிட்டிங் (Pipe Fitting) ஹெவி இகுஇப்மெண்ட்  ஒப்ரடோர் (Heavy equipment operator) கார்பென்த்ரி (Carpentry) மேசன்ட்ரி (Masontry ) பயில் டிரைவிங் (Pile Driving) ஹோட்டல் ரெஸ்டூரண்ட் சமையல் வேலைக்கும், வைத்திய சாலைகளில் நேர்ஸ் (Nurse),கேர் கிவர் (Care Giver).மாஸ் மீடியாவில் கிராபிக் டிசைனர், (Graphic Designer)  பிரசெண்டர் (Presenter) ரிபோர்ட்டர் (Reporter) ஜெர்னலிஸ்ட் (Journalist) கேமரா மேன் (Cameraman) போன்ற தொழில்களுக்கும் மேலும் விரிவாக சொல்லப்போனால் .......
உதாரணமாக
Building Construction Industries
1)   Plumbers
2)   Pipe Fitters
3)   Carpenters
4)   Masons
5)   Heavy Equipment Operators (Back Hoe, Fork Lift Driver)
6)   Pile Drivers
7)   Surveyors
8)   Draftsmen
9)   Heavy Truck Drivers
10) Light Truck Drivers
11) Process Operators
12) Electricians
13) Stationary/ Power Engineers
14) Elevator / Escalator Mechanics

Media Communications Industries
1)   News Reporters
2)   Presenters
3)   Cameramen
4)   Graphic Designers
5)   Editors
6)   Investigative Reporters

Hospitality Industries
1)   Cook (Continental /Western)
2)   Hotel / Restaurant Managers
3)   Servers
4)   Housekeepers
5)   Banquet Servers / Captain

Health Care Industries
1)   Nurses
2)   Care Givers
3)   Radiographers
4)   Physiotherapist
5)   X ray Technicians
6)   Cardiologist
7)   Pharmacist
8)   Human Resources Professionals
9)   Lab Technicians
10)  Ultra Sound Technician
Airline Industries
1)   Commercial Pilots
2)   Cabin Crews
3)   Aircraft Mechanics
4)   Aircraft Maintenance Technicians
5)   Air Traffic Controllers
6)   Ticketing Agents
7)   Baggage Handlers
8)   Limo Drivers

Highly Paid Oil and Gas Industries
1)   Petroleum Engineers
2)   Geologist
3)   Mechanical Engineers
4)   Surveyors
5)   Plumbers
6)   Pipe Fitters
7)   Crane Operators
8)   Power Engineers
9)   Process Operators
10) Gas Fitters
11) Heavy Haul Operators
12) Construction Equipment Operators
மேலே கூறப்பட்ட தொழில் நுட்பப் பாடங்களைப் படித்தவர்களுக்கு மத்திய கிழக்கு நாடுகளிலும், கனடா, அவுஸ்திரேலியா மற்றும் மேற்குலக நாடுகளிலும் இந்தத் தொழில் நுட்பத்துறையுடன் ஆங்கில மொழியில் நல்ல பரீட்சையமும் இருந்தால் பெரிய சம்பளத்துடன் ஏராளமான வேலைவாய்ப்புக்கள் உள்ளன.

மேலே கூறப்பட்டவைகள் அனைத்தும் தொழில் நுட்பம் சார்ந்த துறைகளாகும் இவைகளை நீங்கள் அந்தந்த  Course  க்கு பொருத்தமான தொழில் நுட்ப கல்லூரிகளைத் தேடிக்கண்டு பிடித்து படித்தால் மிக இலகுவாக வெளி நாடுகளில் வேலை பெற்றுக்கொள்ளலாம்.

அடுத்து ஒருபடி மேலாக மேற்படிப்பைத் தொடரவேண்டும் என்று விரும்பி பல்கலைக்கழகங்களுக்கு செல்ல விரும்புபவர்கள் கீழ்காணும் உயர் படிப்புக்களை பல்கலைக்கழகங்களில் மேற்கொண்டால் அவர்களுக்கு கனடா, அமெரிக்கா,அவுஸ்திரேலியா மற்றும் அரபு நாடுகளில் ஏராளமான வேலைவாய்ப்புக்கள் உள்ளன.

-பெட்ரோலியம் இன்ஜினியரிங், (Petroleum Engineering)
-ஏரோ நாட்டிக்கல் இன்ஜினியரிங், (Aeronautical Engineering)
-மரைன் இன்ஜினியரிங், (Marine Engineering)
-நேனோ இன்ஜினியரிங் (Nano Engineering ) போன்ற துறைகள் விளங்குகின்றன.

பெட்ரோலியம் இன்ஜினியரிங்: கச்சா எண்ணெயை (Crude Oil) பெறுவதற்கான புதிய வழிகள் மற்றும் எரிபொருள் உற்பத்தி தொடர்பான விசயங்கள். எண்ணெய் வளத்தை கண்டுபிடிப்பது, பெட்ரோல் மற்றும் எரிவாயுவை பிரித்தெடுப்பது போன்றவற்றை இத்துறை கற்றுத்தருகிறது
ஏரோ நாட்டிக்கல் இஞ்சினியரிங்: விமானம் வடிவைப்பு மற்றும் தொழில் நுட்பம் தான் ஏரோ நாட்டிகல் படிப்பாகும். ஏரோ நாட்டிக்கல்  இறுதியாண்டு படிக்கும் போதே வேலை உறுதி செய்யப்பட்டு விடும் அந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த படிப்பாக இது திகழ்கிறது. பல நாடுகளில் ஏரோ நாட்டிக்கல் இன்ஜினியர்கள் தேவையாக உள்ளனர்.

மரைன் இஞ்சினியரிங்: இலங்கை   வர்த்தகத்தில் பெரும் பகுதி கடல் சார்ந்தே நடக்கிறது. மெரைன் இஞ்சினியரிங் என்பது கப்பல் இயங்கும் முறையை, மற்றும் தொழில் நுட்பங்களை கற்று தருவதாகும்.   இத்துறை பயின்றவர்களுக்கு  வெளிநாடுகளில் அதிக அளவிலான வேலை வாய்ப்புக்கள் உண்டு.இலங்கையிலும் நிறைய வாய்ப்புக்கள்  உண்டு

நேனோ இஞ்சினியரிங்:  நேனோ என்பது நீளத்தை அளக்கும் ஒரு அளவு கோல், ஒரு மைக்ரோ மீட்டரில் ஆயிரத்தில் ஒரு பங்கை நேனோ மீட்டர் என்று சொல்லலாம். நேனோ மீட்டர் அளவில் இருக்கும் பொருள்களை வைத்து செய்யும் தொழில் நுட்பத்தை சுருக்கமாக நேனோ டெக்னாலஜி என்று சொல்கிறார்கள். உதாரணமாக பெரிய அளவிலான பொருட்களை சுருக்கி மிக சிறியவடிவில் செய்வதை கூட நேனோ டெக்னாலஜி என்று சொல்லலாம். இந்த படிப்பும் அதிக வேலை வாய்ப்புகளை பெற்று தர கூடியது.

மேலே கூறப்பட்ட தொழில்நுட்ப பகுதிகளில் நமது இளைஞர்கள் படிக்க ஆரம்பித்தால் வேலையில்லாத்திண்டாட்டத்துக்கு ஒரு முற்றுப்புள்ளி வைப்பதுடன் நமது சம்மாந்துறையின் பொருளாதாரமும் வளர்ந்துவிடும்.

அடுத்து அரசாங்கத்தின் உதவியுடனோ, தனியார் நிறுவனங்களின் உதவியுடனோ ஏற்றுமதி ஆடைகளுக்கான தையல் தொழிற்சாலைகளை சம்மாந்துறையில் நிறுவினால் ஏராளமான ஏழைப் பெண்களுக்கு வேலைவாய்ப்புக்கள் பெற ஏதுவாக இருக்கும்.

அடுத்து நமது தேவைக்காகவும் சந்தைப்படுத்தும் நோக்கத்துடனும் வீட்டுத் தளபாடங்கள் ( Tables, Chairs, Sofas, Ready Made kitchen cabinets, Windows) பெய்ன்ட், (Paint) பாதணிகள்  (Slippers) மற்றும் நாம் அன்றாடம் பாவிக்கும் பொருட்களை உற்பத்தி செய்யக்கூடிய அல்லது தயார்ப் படுத்தக்கூடிய தொழிற்சாலைகளை நிறுவி புதிய தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்தலாம்.

அதேபோன்று தரமான முறையில் கறி தயாரிக்கும் மசாலாக்கள், கொச்சிக்காய் தூள்,மிளகுத்தூள், கொத்தமல்லித்தூள் போன்றவற்றை பெரிய அளவில் சுத்தமான முறையில் தயார் செய்து Food City.. போன்ற பெரிய கடைத்தொகுதிகளுக்கு மொத்தமாக விற்பனை செய்யக்கூடிய தொழிற்சாலைகளை ஆரம்பித்தால் ஊரில் சிலருக்கு தொழில் வாய்ப்புப் பெற உதவுவதோடு நமது பொருளாதாரமும் உயரும்.

இப்படிப்பட்ட ஏராளமான சிறு கைத்தொழில்சாலைகளை எப்படி நிறுவலாம் என்று காத்தான்குடியைப் பார்த்துக் காப்பியடித்தாவது செய்தால் நமது வருங்காலம் வளமுள்ளதாக அமையும் என்பதில் எமக்கு எவ்வித சந்தேகமுமில்லை.

மற்றும்  Construction Equipment  rental  centers, Vehicle dealership  and Mechanical Garages போன்றவற்றை பெரிய அளவில் செய்வதோடு நமக்குத்தேவையான அனைத்துப்பொருட்களையும் கல்முனைக்கோ, அம்பாறைக்கோ  மட்டக்களப்பிட்கோ அல்லது கொழும்பிற்கோ போகாமல் சம்மாந்துறையில் அனைத்தையும் இலகுவில் பெற வாய்ப்புக்களை உருவாக்கினால் நிச்சயமாக நாம் பொருளாதாரத்தில் ஒரு படி முன்னேற வாய்ப்புண்டு.

மேலும் சிறு கைத்தொழில் முயற்சிகளில் ஈடுபடவிரும்புபவர்கள் அது சம்பந்தமான ஆலோசனைகளைப்பெற அது சம்பந்தமான அமைச்சுக்களை அணுகலாம் அத்துடன் இன்டர்நெட்டில் Google பண்ணி அது சம்பந்தமான அறிவைப்பெறலாம்.

தன்னிறைவடைந்த பொருளாதார சுபீட்சத்துக்கு .............
நம்முடைய கருத்து வேறுபாடுகளையும், கட்சி வேறுபாடுகளையும் மறந்து நம் சம்மாந்துறைத்தாய்க்காக, அந்தத்தாயின் அனைத்து புதல்வர்களும் ஒன்று சேர்ந்து முழு மனதுடன் உழைத்தால் இன்னும் 20 வருடங்களில் நாம் சம்மாந்துறையில் ஒரு புதிய சிங்கப்பூரை அல்லது ஒரு கோலாலம்பூரை உருவாக்கலாம்.என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.அப்படி ஒரு குட்டி சிங்கப்பூரை அல்லது கோலாலம்பூரை நம்மண்ணில் உருவாக்க நமக்குத் தேவை ஒரு லீகுவான்யூ அல்லது ஒரு மகதிர் முஹம்மத் .....


வாருங்கள் விரைவில் ஒரு புதிய சம்மான்பூரை உருவாக்குவோம் என உங்களை அழைக்கின்றது சம்மாந்துறை நியூஸ் 

செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog