Breaking

Saturday

ஈழத்தை தவிர எதையும் கொடுக்க மஹிந்த தயாராகவே இருந்தபோதும் தமிழ் கூட்டமைப்பு பெறுவதற்கு முயலவே இல்லை! முன்னாள் எம். பி பியசேன .


(எஸ்.அஷ்ரப்கான் )
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஈழத்தை தவிர தமிழர்களுக்கு எதையும் வழங்குவதற்கு தயாராக இருந்தார், ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்புக்காரர்களுக்கு தமிழ் மக்களை வாழ வைக்க வேண்டும் என்கிற எண்ணம் கிஞ்சித்தும் கிடையாது, இல்லையேல் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு, அபிவிருத்தி ஆகியவற்றை மஹிந்த ராஜபக்ஸ மூலம் பெற்று கொடுத்து இருப்பார்கள் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், ஸ்ரீலங்கா பொதுஜன பெருமுனவின் பொத்துவில் தொகுதி அமைப்பாளருமான பொடியப்பு பியசேன தெரிவித்தார்.

ஆலையடிவேம்பில் ஆதரவாளர்களை சந்தித்து பேசியபோதே இன்று சனிக்கிழமை இவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் குறிபிபிடும்போது,

தமிழ் மக்களை வாழ வைக்க வேண்டும் என்கிற எண்ணம் தமிழ் தேசிய கூட்டமைப்புக்காரர்களுக்கு கிடையாது. ஆனால் மக்களுக்கு பொது பணி செய்ய வேண்டும் என்பதற்காகவே அரசியலுக்கு பிரவேசித்தவன் நான். தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுடன் பழக தொடங்கிய சில சொற்ப நாட்களிலேயே இவர்களுக்கு தமிழ் மக்கள் மீது உண்மையான அக்கறை கிடையாது என்பதை பல சந்தர்ப்பங்களில் நேரிலேயே கண்டு கொண்டேன். பிச்சைக்காரனின் புண்ணை போல தமிழ் மக்களின் பிரச்சினைகளை என்றென்றைக்கும் தீர்க்காமல் வைத்து இருப்பதன் மூலம் தமிழ் மக்களை ஏமாற்றி பாராளுமன்ற சுக போகங்களை அனுபவித்தே கொண்டே இருக்கலாம் என்று கணக்கு போட்டு வைத்திருக்கின்றார்கள். பிரேத பெட்டி விற்பனை செய்பவர்கள் மரணங்கள் நடக்க வேண்டும் என்று ஆண்டவனை எப்போதும் இறைஞ்சி பிரார்த்தித்து கொண்டே இருப்பது போல என்றென்றைக்கும் தமிழ் மக்களுக்கு பிரச்சினைகள் இருக்க வேண்டும், அதில் அவர்கள் குளிர் காய வேண்டும் என்பது இவர்களின் பிரார்த்தனையாக உள்ளது.

நான் அடங்கலாக தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களை ஜனாதிபதியாக அலரி மாளிகையில் மஹிந்த ராஜபக்ஸ சந்தித்த அந்த முதலாவது நாளில் பிரபாகரன் கேட்ட ஈழத்தை தவிர எதையும் தமிழ் மக்களுக்கு வழங்க தயாராக உள்ளார் என்று சந்திப்பின் தொடக்கத்திலேயே பீடிகை போட்டார். ஆனால் தமிழ் மக்களின் நியாயமான உரிமைகள் , அபிவிருத்திகள் தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் அவரிடம் எதையுமே கேட்கவில்லை.

தமிழ் மக்களை யாராவது வாழ வைத்தாலும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்காரர்களுக்கு பிடிக்காது. ஏனென்றால் தமிழ் தேசிய கூட்டமைப்பின் செல்வாக்கு குறைந்து விடும் என்று அஞ்சுகின்றார்கள். கிழக்கு மாகாண முதலமைச்சராக பதவி வகித்து பிள்ளையான் என்று அழைக்கப்படுகின்ற சிவநேசத்துரை சந்திரகாந்தன் அளப்பரிய அபரமித அபிவிருத்திகளை அன்றைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மூலமாக கிழக்கு மாகாண மக்களுக்கு குறிப்பாக தமிழர்களுக்கு செய்து கொடுத்தார். இதனால் இவரின் மக்கள் செல்வாக்கு குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பு அஞ்சியது. இவரை தமிழ் மக்களிடம் இருந்து அன்னியப்படுத்த முயற்சித்தது. இவருடைய அரசியல் வாழ்க்கையை அஸ்தமனம் செய்யவும் பகீரத முயற்சிகளை மேற்கொண்டது. எத்தனையோ மோசமான அரசியல்வாதிகள் வெளியில் சுதந்திரமாக நடமாடி திரிகின்ற சம நேரத்தில் மக்கள் சேவையாளனாகிய பிள்ளையான் நான்கு சுவர்களுக்குள் முடக்கப்பட்டு உள்ளார் என்றால் இதற்கு பின்னால் தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளது என்பதே எனது அனுமானம் ஆகும்.


நல்லாட்சி என்று சொல்லப்படுகின்ற தற்போதைய அரசாங்கத்தில் எமது தமிழ் பிள்ளைகள் அரசாங்க தொழில் வாய்ப்பு இல்லாமல் வீதிகளில் போராட்டங்களை நடத்தி வருகின்றார்கள். ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் பிள்ளை அமெரிக்காவில் உள்ள இலங்கை தூதரகத்தில் உயர்நிலை பதவி வகித்து வருகின்றார்
செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog