Breaking

Sunday

அம்பாறையில் இரு சுயேச்சை அணிகள் கட்டுப்பணம் செலுத்தின!


காரைதீவு  நிருபர் சகா

எதிர்வரும் உள்ளூராட்சிமன்ற தேர்தலில் சுயேற்சையாக போட்டியிட சாய்ந்தமருது மாளிகைக்காடு மக்கள் பணிமனை தீர்மானித்ததற்கமைவாகஇ நேற்று (08) கல்முனை மாநகரசபை மற்றும் காரைதீவு பிரதேச சபை ஆகியவற்றுக்கான இரண்டு சுயேற்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தின.

சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜும்ஆ பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபைத் தலைவர் வை. எம். ஹனீபா தலைமையில் கல்முனை மாநகரசபைக்கும் 
சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜும்ஆ பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை உறுப்பினரும் மாளிகைக்காடு சைத் இப்னு தாபித் பள்ளிவாசல் தலைவருமான எம்.ஐ. ஸாஹிர் ஹுஸைன் தலைமையில் காரைதீவு பிரதேச சபைக்கும் கட்டுப்பணங்கள் செலுத்தப்பட்டன.


கல்முனை மாநகரசபைக்காக போட்டியிடும் கட்சிகள் சுயேற்சைக்குளுக்களுக்கான வரிசையில் கட்டப்பட்ட முதலாவது கட்டுப்பணம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

இத்துடன் காரைதீவு பிரதேசசபைக்கு இரு சுயேச்சை அணிகள் தமிழர் சார்பாகவும் முஸ்லிம்கள் சார்பாகவும் கட்டுப்பணம் செலுத்தப்பட்மை குறிப்பிடத்தக்கது.


செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog