Breaking

Saturday

மடுவத்தின் அனைத்து குறைகளையும் நிவத்திக்க செயலாளர் பிர்னாஸ் இஸ்மாயிலினால் முன்னெடுப்பு...


ஏறாவூர் ஏ.ஜி.முகம்மட்

ஏறாவூர் நகர சபையின் பராமரிப்பின் கீழ் இயங்கி வருகின்ற ஐயங்கேணி பகுதியில் அமையப்பெற்ற விலங்கறுமனை (மடுவம்) தொடர்பாக பொதுமக்களினால் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டினையடுத்து ஏறாவூர் நகர சபையின் செயலாளரும் விசேட ஆணையாளருமான பிர்னாஸ் இஸ்மாயில் தலையில் ஒரு குழுவினர் இன்று (09) குறித்த இடத்துக்கு விஜயமொன்றை மேற்கொண்டு அங்குள்ள குறைபாடுகளை மேற்பார்வையிட்டதுடன் குறித்த குறைபாடுகளை உடனடியாக நிவர்த்தி செய்யுமாறு சம்பந்தப்பட்ட 
உத்தியோகத்தர்களுக்கு பணிப்புரை வழங்கி வைத்தார்.

மேற்படி விஜயத்தின்போது இறைச்சிக் கடை உரிமையாளர்களினால் கீழ் குறிப்பிட்ட முறைப்பாட்டியினை முன்வைத்தனர்.

அறுக்கப்படுகின்ற மாடுகளின் கழிவு நீர்வடிந்தோடுவதற்கு முறையான சுத்திகரிப்பு கழிவுத் தாங்கி  இல்லாமையினால் அப்பிரதேசத்தில் துர்நாற்றம் வீசுவதாகவும் அதற்கான நிரந்தரக் கழிவுத் தாங்கியினை அமைத்துத் தருமாறும், மாடுகளை அறுக்கின்ற பகுதிகளில் சீமெந்துத் தரைகள் குன்றும் குழியுமாக காணப்படுவதால் அதனை செப்பனிட்டுத் தருமாறும், நீர் பம்பி(Tap) மற்றும்  மின் குமிழ்களை பொருத்தித் தருமாறும், மடுவக் காரியாலயக் கதவு மற்றும் ஜன்னல்கள் உறுதியாக இல்லாமையினால் பொருட்களை வைக்க முடியாமல் உள்ளது. இதனைத் திருத்தித் தருமாறும் கோரியிருந்தனர்.

மேலும், விலங்கறுமனையின் வெளியில் அமைந்துள்ள மாடுகளின் கழிவுத் தோல்களை போடுவதற்காக அமைக்கப்பட்டுள்ள தாங்கியை திருத்தி அமைத்து தருகின்ற அதேவேளை கூறையின் மேல் பகுதி சீரின்மையால் மழைகாலங்களில் மாடுகளை அறுப்பதில் பல சிரமங்கள் ஏற்பட்டுவருகின்ற விடயங்களையும் செயலாளரிடம் சுட்டிக்காட்டினர்.

அத்துடன், மாடுகளை அறுப்பதற்காக கொண்டு வருகின்ற மாடுகளை சுகாதாரப் பரிசோதகரினால் பரிசோதிப்பதற்காக கட்டப்படுகின்ற தொழுவமொன்று இல்லாமையின் காரணத்தால் கன்றுகளையும், நோய்யுள்ள மாடுகளையும் மற்றும் கன்றுத்தாய் மாடுகளையும் அறுத்து வருகின்றனர். இதனை இல்லாமல் செய்வதற்கு தொழுவத்தினை அமைத்துத் தருமாறும் கோரியிருந்தனர்.

குறிப்பிட்ட இக்குறைபாடுகளை உடனடியாக நிவர்த்தி செய்யுமாறு சம்பந்தப்பட்ட உத்தியோகத்தர்களுக்கு பணிப்புரை வழங்கி வைத்தார். 

 குறித்த விஜயத்தில் நகர சபையின் வருமானப் பரிசோதகர் எம்.எஸ்.எம்.தாரிக் மற்றும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர் எஸ்.எம்.எம்.முபாரக் ஆகியோர் பிரசன்னமாகி இருந்தனர்.  






செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog