Breaking

Friday

காரைதீவை சம்மாந்துறைக்கு தாரைவார்த்தவர்கள் பிரதேசசபையையும் தாரைவார்க்கத் தயங்கமாட்டார்கள்!


(காரைதீவு   நிருபர் சகா)

பழம்பெரும்  காரைதீவு மண்ணை யாரிடமும் கேட்காமல் சம்மாந்துறையுடன்  இணைத்தவர்கள் தெரிவாகும் பிரதேசசபையை மாற்றானிடம் தாரைவார்க்கத்தயங்க மாட்டார்கள்.  எனவே மக்களே இன்னமும் ஏமாறாமல் ஊர்த்தெரிவான சுயேச்சைக்கு வாக்களித்து ஊரைக்காப்பாற்றுங்கள்.

இவ்வாறு காரைதீவு பிரதேச சுயேச்சைக்குழு-1 இன் தேர்தல் அலுவலகத்தை திறந்துவைத்து உரையாற்றிய சுயேச்சைக்குழுத்தலைமை வேட்பாளர் சந்திரசேகரம் நந்தகுமார் தெரிவித்தார்.

அம்பாறை காரைதீவு பிரதேசசபைக்குட்பட்ட  ஆறாம் வட்டாரத்திற்கான சுயேச்சைக்குழு 1இன் வேட்பாளர் நமசிவாயம் ஜெயகாந்தனின்  தேர்தல் காரியாலயம் நேற்றுமுன்தினம் (17) புதன்கிழமைமாலை  5மணியளவில் 8ஆம் பிரிவில் கடற்கரைவீதியில் கோலாகலமாக பொதுமக்களால்  திறந்துவைக்கப்பட்டது..

வேட்பாளர் நமசிவாயம்  ஜெயகாந்தன் தலைமையில் நடைபெறவுள்ள இத்திறப்புவிழாவில் ஆறாம் வட்டாரத்திற்கான சகவேட்பாளர்களான ஓய்வுநிலை மருந்தாளரும் பிரபல சமுகசேவையாளருமான ஆ.பூபாலரெத்தினம்  பட்டதாரி வ.சத்தியமாறன் ஆகியோரின் வட்டhரத்திற்கான உரையும் இடம்பெற்றன.. சமுகசேவையாளர் வெற்றிவேல் ஜெயகோபனின் சிறப்புரையும் சகவேட்பாளர் சின்னத்துரை நந்தேஸ்வரனின் உரையும் இடம்பெற்றன.

காரைதீவின் ஊர்த்தீர்மானத்திற்கமைவாக களத்தில் இறங்கிய சுயேச்சைக்குழு வேட்பாளர்கள் இந்நிகழ்வில் பங்கேற்றனர். வேட்பாளர்  அறிமுகநிகழ்வும் இடம்பெற்றது..

ஆறாம் வட்டாரத்திற்குட்பட்ட 3ஆம் 4ஆம் 8ஆம் 9ஆம் குறிச்சி மக்கள் பெருந்தொகையானோர் கலந்துகொண்டனர்.


அங்கு தலைமைவேட்பாளர் நந்தகுமார் மேலும் உரையாற்றுகையில்:

கடந்த 30வருட காலமாக த.தே.கூட்டமைப்பினர் திரும்பத்திரும்பக் கூறுவதைக்கேட்டு வாக்களித்து ஏமாந்துபோனோம். இன்னமும் ஏமாற வேண்டுமா?

கிழக்கு மாகாணத்தையே தாரைவார்த்தவர்களுக்கு காரைதீவை தாரை வார்ப்பது ஒன்றும் பெரியவிடமல்ல. கேவலம் சம்மாந்துறையையும் ஆலையடிவேம்பையும் காப்பாற்றமுடியாதவர்கள் காரைதீவைக் காப்பாற்றப்போகிறார்களாம்.

எமது சுயேச்சை ஜ.நா. செல்லுமா என்று கேட்டார் எம்.பி.. நான் தெரியாமல் கேட்கிறேன். அம்பாறை மாவட்டத்திற்கென நியமிக்கப்பட்ட அவரால் மாவட்ட ஏன் அவரது பிரதேச பிரச்சினையையே தீர்க்கமுடியாமல் போய்விட்டது. அதற்குள் ஜ.நா.செல்கிறாராம். 

கூரை ஏறி கோழி பிடிக்கத்தெரியாதவன் வானம் ஏறி வைகுந்தம் போவானாம் என்று சொல்வார்கள். அதுபோல அவரின்கதை உள்ளது.

அவ்வப்போது வந்து தாயகம் தேசியம் வடக்கு கிழக்கு இணைப்பு ஜெனீவா ஜ.நா.. இப்படி பல உணர்ச்சிமிகு வசனங்களைப்பேசி மக்களை உசுப்பேற்றி தாம் பாராளுமன்றம் செல்வார்கள். அவர்கள் கொந்தராத்து அதுவும் அவர்களது பகுதியில் மட்டும் செய்வார்கள். ஆனால் இங்கு வாக்களித்த மக்கள் அதேநிலையில் இருப்பார்கள். 

இம்முறையும் வருவார்கள். வீரவசனம் பேசுவார்கள். அவைகள் எமக்கு சோறுபோடாது. 

சுனாமியால் வந்த வரப்பிரசாதங்களை விட இந்த காரைதீவு மண்ணில் குறிப்பிடத்தக்க அபிவிருத்திகளை இந்தகட்சியினரால் அல்லது பொற்காலம் என்று அவர் மட்டும் கூறும் காலத்தின் தவிசாளரால் செய்யமுடிந்ததா?

அபிவிருத்தி அபிவிருத்தி என்கிறார்கள். அவர்களை அபிவிருத்தி செய்தார்களே தவிர இந்த மண்ணை அபிவிருத்திசெய்யவில்லை. அநேகம் தேவையில்லை. இந்தவட்டாரத்திலுள்ள  சித்தானைக்குட்டி ஆலயத்திற்கான வீதியைப் பாருங்கள். இவர்களது சேவையை அறிந்துகொள்ளலாம்.

ஒவ்வொரு தேர்தலுக்கும் ஒவ்வொரு கட்சி. ஒவ்வொரு சின்னம். இம்முறையும் வருகிறார்கள். இவர்களுக்கு அளிக்கும் வாக்குகள் மாற்றானுக்குச்செல்லும் என்பதில் எவ்வித ஜயமுமில்லை. எனவே அவருக்கு ஒரு வாக்குத்தானும் அளித்து பொன்னான வாக்குகளை வீணடிக்கக்கூடாது.
காரைதீவானின் வாக்குகள் மாற்றானுக்கு செல்லவேண்டுமா? சிந்தியுங்கள்.

வேட்பாளர் சி. நந்தேஸ்வரன் உரையாற்றுகையில்:

கடந்த 30வருடகாலமாக நாம் ஏமாந்தது போதும். இவ்வட்டாரத்திலுள்ள சித்தானைக்குட்டி ஆலயத்திற்கு அப்பால் உள்ள எமது தரிசு நிலத்தை பயன்படுத்தி அபிவிருத்தி செய்யவேண்டும் என வேண்டாத எம்.பிக்கள் இல்லை. பிரதிநிதிகள் இல்லை.

இன்னும் அந்நிலம் அப்படியே கிடக்கிறது. இதற்குள் அபிவிருத்திப ற்றிக்கதைக்கிறார்கள்.

 இன்றைய கலாசார சீரழிவு மதமாற்றம் வறுமை அனைத்திற்கும் காரணம் த.தே.கூட்டமைப்பே தவிர வேறெவரையும் குற்றம் சாட்டமுடியாது. ஒரு திட்டமும் இல்லை. செயற்பாடும் இல்லை. தேர்தல் என்றால் மட்டும் வருவார்கள். பின்பு அவர்களைக்காணமுடியாது. 

காரைதீவு எல்லை பற்றி கதைக்கச் சிலர் தலைப்பட்டுள்ளனா.; கோமா நிலையிலிருந்துவிட்டு தேர்தல் வந்ததும் எல்லை பற்றியும் சிலை பற்றியும் கதைப்பார்கள். எமக்குத் தெரியும் அதனை எப்படி பாதுகாப்பது என்று. கிழக்கையே தாரை வார்த்த கும்பல் அது. தீர்வுஒன்று வநதால் அம்பாறை தமிழர்கள் கடலுக்குள்ளே தான் குதிக்கவேண்டும். ஏனெனில் அம்பாறையை விடுத்துத்தான் இந்தக் கூத்தமைப்பு தீர்வைத்தயாரித்துள்ளது.

அதற்குள் வாக்குக்கேட்டு வருகிறார்கள். மக்களே வாழ்விலும் சாவிலும் இறுதிவரை கூட இருப்பவர்களான சுயேச்சை அணியினருக்கு வாக்களிப்பதனூடாக உங்கள் எதிர்காலத்தை வளப்படுத்திக்கொள்ளுங்கள். தேர்தல் முடிந்தவுடன் ஓடுபவர்கள் அல்ல நாம். 

காரைதீவில் பிறக்காதவருக்கே வாக்களித்து 4வருடம்  அரசியல்செய்ய வாய்ப்பளித்தவன் காரைதீவான். அவர்கள் பின் மாறிமாறி கட்சிமாறி கொள்கை மாறி இன்று மாற்றானுக்கு வாக்குச்சேகரித்துக்கொடுக்க வந்துள்ளனர். ஒரு வாக்குக்கூட அவர்களுக்கு அளிக்கவேண்டாம்.


செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog