Breaking

Tuesday

சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு இரண்டு  குடி நீர் சுத்திகரிப்பு உபகரணங்கள் , சம்மாந்துறை மக்களின் சுகாதார நலன்புரி அமைப்பினால் ( Well Wishers Of BH/Str) அன்பளிப்பு..!


(06/01/2018) சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு இரண்டு  குடி நீர் சுத்திகரிப்பு உபகரணங்கள் , சம்மாந்துறை மக்களின் சுகாதார நலன்புரி அமைப்பினால் ( Well Wishers Of BH/Str) அன்பளிப்பு செய்யப்பட்டது. "

சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் நலன் விரும்பிகளால் சம்மாந்துறை ஆதாரவைத்தியசாலையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டு இயங்கிவரும் சம்மாந்துறை மக்களின் சுகாதார நலன்விரும்பி அமைப்பினால் வெளி நோயாளர் பிரிவு,  கிளினிக் ஆகிய இடங்களில் சிகிச்சை பெறும் நோயாளிகள் சுத்தமான நீரை அருந்த வேண்டும் என்ற நோக்கில் இரண்டு நீர் சுத்திகரிக்கும்  உபகரணங்கள் சம்மாந்துறை ஆதார வைத்திய சாலையின் வைத்திய அத்திகட்சகர் Dr. YBM அப்துல் அஷீஷ் அவர்களிடம்  கையளிக்கப்பட்டது. 

வெளி நோயாளர் பிரிவுக்கான குடி நீர் சுத்திகரிப்பானை  Reessa Str ஸதகா அமைப்பும்  கிளினிக் குடிநீர் சுத்திகரிப்பானை Str Boys 'நமக்காக நாம்' என்ற ஸதகா அமைப்பும் சம்மாந்துறை மக்களின் சுகாதார நலன்புரி அமைப்பினூடாக ஸதகா செய்திருக்கின்றன. 

அல்ஹம்துலில்லாஹ்
செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog