Breaking

Thursday

மு.கா.விற்கு அளிக்கும் வாக்குகள் கடலில் கரைத்த உப்புக்கு சமானமாகும்! ஜனாதிபதியின் கரத்தைப்பலப்படுத்த கரத்திற்கு வாக்களியுங்கள்!


காரைதீவு  நிருபர் சகா

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸூக்கு அளிக்கும் வாக்குகள் கடலில் கரைத்த உப்புக்கு சமானமாகும். எனவே தொடர்ந்து சேவையாற்ற உதவியாகவிருக்கும் எமது ஜனாதிபதியின் கரத்தைப் பலப்படுத்த கரத்திற்கு(கை) வாக்களியுங்கள்.

இவ்வாறு சம்மாந்துறை பிரதேசசபைக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி சார்பில் போட்டியிடும் சு.கட்சி பிரதேச அமைப்பாளரும் முன்னாள் சம்மாந்துறை பிரதேசசபை உறுப்பினருமான அச்சிமொகமட் தெரிவித்தார்.

நேற்று அவரது வட்டாரத்தில் அவரது ஆதரவாளர்களைச் சந்தித்து கலந்துரையாடுகையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும்கூறுகையில்:
என்னை இரு கட்சிகளும் கௌரவமாக அழைத்தபோதிலும் எனக்கு நேரடியாக தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு அழைத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கௌரவப்படுத்தி ஸ்ரீல.சு.கட்சியில் நான் போட்டியிடுகின்றேன்.

அவர் எதிர்வரும் 2020 ஆம் ஆண்டுவரை பதவியிலிருப்பார். உள்ளுராட்சி மன்றத்தேர்தலில் யார் வென்றாலும் அவர் தொடர்ந்து பதிவியிலருப்பார். 

எனவே நாமும் தொடர்ந்து அவரோடு பயணித்தால் எமது பிரதேசத்திற்கான அபிவிருத்திகளை இலகுவாகச் செய்துகொள்ளமுடியும்.
அதிலும் குறிப்பாக அமைப்பாளர்களுக்கு கூடுதல் அதிகாரங்களை வழங்கி அவர்களுடாக பல வேலைத்திட்டங்களை முன்னெடுக்க ஜனாதிபதி திட்டமிட்டுள்ளார்.

எனவே அவரது கரத்தைப் பலப்படுத்துவதனூடாக மட்டுமே தொடர் அபிவிருத்தியை நாம் பெற்றுக்கொள்ளமுடியும். எனவேதான் கரத்திற்கு வாக்களிக்குமாறு கேட்கின்றேன்.
ஏனைய சிறுபான்மைக் கட்சிகளுக்கு ஒரு அமைச்சர் அல்லது இரு அமைச்சர்கள் . அவர்களை வைத்துக்கொண்டு அவர்களது ஆதரவாளர்களுக்கெ எதுவுமே செய்யமுடியாத நிலை. இதனை கடந்த கால வரலாற்றில் பார்க்கலாம்.

ஆனால் பல அமைச்சர்களுடன் பலம் பொருந்தியதாக இருக்கும் தேசியக்கட்சியான சு.கட்சியில் நாம் அணிதிரளுவது எமக்குவலுச்சேர்க்கும். எதையும் சாதிக்கலாம்
ஒரு நிலையான கொள்கையில்லாதவர்களோடு கைகோர்ப்பதில் மக்களுக்கு எந்தவித பயனுமில்லை. ஆனால் தலைவர்களுக்கு நல்ல பயன்கள். 
அந்த நிலை எமது சு.கட்சியில் இல்லை. எனவே சு.கட்சியை எமது சம்மாந்துறை மண்ணில் வெல்ல வைப்பதனூடாக சம்மாந்துறையின் அபிவிருத்தியை மேம்பாடடையச்செய்யலாம் என்றார்.
செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog